முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத கடும்போக்குவாதத்திற்கு ஆதரவளிக்கின்றனர் ; ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத கடும்போக்குவாதத்திற்கு ஆதரவளிக்கின்றனர் ; ஞானசார

மத கடு;ம்போக்குவாதங்ள் பற்றி வெளிப்படுத்தினால் நாடு இரத்த வெள்ளத்தில் மூழ்கிவிடும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் பாரியளவில் மத கடும்போக்குவாதம் தலைவிரித்தாடுகின்றது.

மதச் செயற்பாடுகள் குறித்த விசேட பொலிஸ் பிரிவு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு இயங்குவது போதுமானது.
இல்லையேல் பள்ளிவாசல், தேவாலயங்கள் தோறும் விசேட பொலிஸ் பிரிவு உருவாக்க நேரிடும்.
மத்திய கிழக்கு நாடுகளைப் போன்று இலங்கையிலும் முரண்பாடுகள் ஏற்படக் கூடுமென்ற சம்பிக்க ரணவக்கவின் கருத்து சரியானதே.
மத முரண்பாடுகள் குறித்த சட்டம் அமுல்படுத்தப்பட்டால் பொலிஸ் பிரிவுகள் உருவாக்கப்பட வேண்டியதில்லை.
முஸ்லிம் அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள்,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத கடும்போக்குவாதத்திற்கு ஆதரவளிக்கின்றனர்.
சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டு அரசியல் வரப்பிரசாதங்களுடன் வாழும் நபர்களே இவ்வாறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad