முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு காலக்கெடு வழங்கவேண்டும் ! ஹசன் அலி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு காலக்கெடு வழங்கவேண்டும் ! ஹசன் அலி


நாட்டில் மேற்­கொள்­ளப்­படும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­க­ளையும் பிரச்­சி­னை­க­ளையும் தீர்ப்­ப­தற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அர­சுக்கு ஒரு காலக்­கெடு வழங்க வேண்டும். தவ­றினால் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் கட்சி பேத­மின்றி ஒரு மாத காலத்­திற்கு பாரா­ளு­மன்­றத்தை பகிஷ்­க­ரிக்க தீர்­மா­னிக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பி­னரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரசின் செய­லாளர் நாய­க­மு­மான எம்.ரி.ஹசன் அலி தெரி­வித்தார்.
 
பொது பல­சேனா அமைப்பு அண்­மைக்­கா­ல­மாக மேற்­கொண்டு வரும் முஸ்­லிம்­களின் மீள்­கு­டி­யேற்றம் உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­வது தொடர்பில் கொழும்பு புக்கர்ஸ் மண்­ட­பத்தில் நடை­பெற்ற கலந்­து­ரை­யா­டலில் உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.
 
கடந்த திங்­கட்­கி­ழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்­ஸில் தலைவர் என்.எம்.அமீன் தலை­மையில் நடை­பெற்ற இந்­நி­கழ்வில் அமைச்சர் ரிசாத் பதி­யுதீன், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பைஸல் காசீம், பாரூக் முத்­த­லிப்­பாவா உட்­பட அகில இலங்கை ஜம் இய்­யத்துல் உல­மா­சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில், முஸ்லிம் சட்­டத்­த­ர­ணிகள் சங்கம் அகில இலங்கை வை.எம்.எம்.ஏ.பேரவை முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்­னணி, அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்­னணி தேசிய சூறா கவுன்ஸில் முஸ்­லிம்­களின் செய­லகம் முஸ்லிம் மீடியா போரம் ஸ்ரீலங்கா ஜமா அத்தே இஸ்­லாமி ஐக்­கிய முஸ்லிம் உம்மா, மஜ்­லிஸுல் சூறா கிரஸன்ட் பவுண்­டேஷன் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி மற்றும் முஸ்லிம் இளைஞர் முன்­ன­ணியின் பிர­தி­நி­திகள் கலந்து கொண்­டனர்.
 
ஹசன் அலி தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் முஸ்லிம் எம்.பி. க்களும் முஸ்லிம் இயக்­கங்­களும் அடிக்­கடி கூட்­டங்கள் கூடி கலந்­து­ரை­யா­டல்­களை மேற்­கொண்டு அறிக்­கைகள் விடு­வ­திலும் ஜனா­தி­ப­திக்கு மகஜர் சமர்ப்­பிப்­ப­திலும் எது­வித பிர­யோ­ச­னமும் இல்லை. வடக்கில் மாத்­தி­ர­மல்ல கிழக்­கிலும் முஸ்­லிம்­களின் காணிகள் அப­க­ரிக்­கப்­பட்­டுள்­ளன. வில்­பத்து பகு­தியில் முஸ்­லிம்கள் மீள்­கு­டி­யேற்­றப்­ப­டு­வ­தற்கு எதி­ரான பிர­சா­ரங்கள், நட­வ­டிக்­கைகள் மாத்­தி­ர­மல்ல ஏரா­ள­மான பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு சமூகம் முகம் கொடுத்­துள்­ளது. இந்த பிரச்­சி­னை­களில் அவ­ச­ர­மாக உட­ன­டி­யாக தீர்­கப்­பட வேண்­டி­ய­வற்றை இனம் கண்டு அவற்றைத் தீர்க்க அர­சாங்­கத்­திற்கு காலக்­கெடு கொடுக்க வேண்டும். அரசு பிரச்­சி­னை­களை தீர்க்க தவறும் பட்­சத்தில் முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் அனை­வரும் ஒன்­றி­ணைந்து பாரா­ளு­மன்­றத்தை ஒரு மாதத்­துக்கு பகிஷ்­க­ரித்து இந்த செய்­தியை சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட வேண்டும்.
 
அரசு மிக பலம் பொருந்­தி­ய­தாக இருக்­கின்­றது. இந்தப் பலத்தை நாமே கொடுத்து வரு­கின்றோம். எமக்குள் ஏற்­பட வேண்­டிய கட்சி பேத­மற்ற ஒற்­று­மையே சமூ­கத்­துக்கு நன்மை பயக்கும். வடக்­கிலும் கிழக்­கிலும் இரா­ணுவ கெடு­பி­டிகள் அதி­க­ரித்­துள்­ளன.
அம்­பாறை மாவட்­டத்தில் 30 ஆயிரம் ஏக்கர் காணி இரா­ணு­வத்­தி­னரால் கையேற்­கப்­பட்­டுள்­ளது. கிழக்கில் மொத்தம் 60 ஆயிரம் ஏக்கர் காணி சொந்த மக்­களின் கைக­ளி­லி­ருந்து பறிக்­கப்­பட்­டுள்­ளது. மன்­னாரில் புல்­மோட்­டையில் இவ்­வாறு நடந்­துள்­ளது.
 
நாங்கள் அடிக்­கடி கூட்­டங்கள் கூடி பேசிக் கொண்­டி­ருப்­பதில் பய­னில்லை. இந்த கூட்­டத்­துக்கு 4 பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே சமு­க­ம­ளித்­துள்ளோம். நாம் தாம­தி­யாது செயலில் இறங்கா விட்டால் எம்­மீ­தான அடா­வ­டித்­த­னங்கள் தொடர்ந்த வண்­ணமே இருக்கும். முஸ்லிம் பாரா­ளு­மன்ற ஒன்­றியம் என்று ஒன்று இருக்­கின்­றது. இதனால் பய­னுள்ள செயற்­பா­டுகள் நடை­பெ­று­வ­தில்லை. முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களை உரு­வாக்கும் பணி­யையே செய்­கின்­றது. முஸ்­லிம்­களின் பிரச்­சி­னைகள் சர்­வ­தேச மட்­டத்­துக்குச் சென்று விட்­டது. இந்நிலையில் முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாத்து நல்லாட்சியை உருவாக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
 
பொதுபலசேன, வில்பத்து தேசிய வன பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியே ற்றப்பட்டுள்ளதாக முன்வை த்துள்ள குற்ற ச்சாட்டுக்களை மறுத்து அது தொடர்பான தெளிவுகளை மகஜர் ஒன்றின் மூலம் ஜனா திபதியிடம் கையளிப்பதற்கும் நிகழ்வின் போது தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post Top Ad