பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரும், அறிஞரும், நூலாசிரியருமான முஹம்மது குதுப் வபாத் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரும், அறிஞரும், நூலாசிரியருமான முஹம்மது குதுப் வபாத்

(tho)


பிரபல இஸ்லாமிய சிந்தனையாளரும், அறிஞரும், நூலாசிரியருமான முஹம்மது குதுப் அவர்கள் மரணமடைந்தார்கள்(இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி
ராஜிவூன்).பிரபல இஸ்லாமிய நவீன எழுச்சியின் சிற்பியும், சிந்தனையாளருமான செய்யது குதுப் அவர்களின் சகோதரர்தாம் முஹம்மது குதுப்.ஜித்தாவில் இண்டர் நேசனல் மெடிக்கல் செண்டரில் வைத்து மரணமடைந்த முஹம்மது குதுபுக்கு வயது95.

1919-ஆம் ஆண்டு எகிப்தில் அஸ்யூதிற்கு அருகே உள்ள முஸா கிராமத்தில் குதுப் பிறந்தார்.1954-ஆம் ஆண்டு எகிப்து புரட்சியைத் தொடர்ந்து கைதுச் செய்யப்பட்ட முஹம்மது குதுப் பின்னர் சிறையில் இருந்து விடுதலையானாலும் 1965-ஆம் ஆண்டு முதல் 1972-ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக சிறை தண்டனை அனுபவித்தார்.சிறையில் விடுதலையான பிறகு சவூதிக்கு புலன் பெயர்ந்தார்.35 நூற்களை எழுதியுள்ளார்.
1988-ஆம் ஆண்டு மன்னர் பைஸல் விருது பெற்றார்.1998-ஆம் ஆண்டு ஜமாஅத்தே இஸ்லாமியின் கேரள பிரிவு ஏற்பாடுச் செய்த ஹிரா மாநாட்டில் பங்கேற்பதற்காக வருகை தந்தார்.அவரது உடல் ஜித்தாவில் 05.04.2014 அன்று அடக்கம் செய்யப்பட்டது

No comments:

Post Top Ad