பொதுபல சேனாவுக்கு சவால் விடுத்துள்ள மன்னார் முஸ்லிம்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

பொதுபல சேனாவுக்கு சவால் விடுத்துள்ள மன்னார் முஸ்லிம்கள்


மன்னார் மாவட்டம் மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் வில்பத்து வனப் பகுதிக்கு அருகில் குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம் மக்கள் தொடர்பாக ஆராயும் நோக்கில் பொதுபல சேனா அமைப்பு நாளைய தினம் அங்கு விஜயம் செய்ததாக அதன் நிறைவேற்று செயலாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பின் இந்த விஜயம் வெறும் ஆராயும் நோக்கத்தை மாத்திரம் கொண்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், வில்பத்து தேசிய வனத்தை அழித்து அமைச்சர் ரிசாத் பதியூதீன் சட்டவிரோத நிர்மாணிப்புகளை மேற்கொண்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குற்றம் சுமத்தி வருகிறது.
இதற்கு எதிரான ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது போனால் தாம் நேரடியாக களத்தில் இறங்க போவதாக அந்த அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் குறிப்பிட்டிருந்தார்.
மரிச்சுக்கட்டியில் இருந்து வெளியேறுமாறு அழுத்தம் கொடுத்தால் தற்கொலை செய்வோம் - மக்கள் எச்சரிக்கை
வில்பத்து வனத்திற்கு அருகில் மரிச்சுக்கட்டி பிரதேசத்தில் குடியிருக்கும் தம்மை அங்கிருந்து வெளியேறுமாறு பௌத்த அமைப்புகள் மற்றும் அரசாங்க தரப்பினர் அழுத்தம் கொடுத்தால், தற்கொலை செய்து கொள்ள போவதாக அங்கு வசிக்கும் முஸ்லிம் மக்கள் எச்சரித்துள்ளனர்.
அந்த பகுதிக்கு இன்று காலை விஜயம் செய்த பொதுபல சேனா அமைப்பின் பிக்குமாரிடம் அவர்கள் இதனை கூறியுள்ளனர்.
1990 ஆம் ஆண்டு முதல் தாம் இந்த காணிகளில் வசித்து வந்தாகவும் விடுதலைப் புலிகளின் அழுத்தங்கள் காரணமாக அவற்றை கைவிட்டு புத்தளத்திற்கு சென்றதாகவும் போர் முடிவடைந்த பின்னர் மீண்டும் தாம் காணிகளுக்கு திரும்பியதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமது காணிகளில் சுமார் 100 ஏக்கர் காணி காடு வளர்ப்புக்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதோடு, 300 ஏக்கர் காணியை கடற்படையினர் சுவீகரித்துள்ளனர் என்றும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad