பொது பல சேனாவின் அடாவடித்தனங்களை சட்டரீதியாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க றிஷாத் உறுதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 21, 2014

பொது பல சேனாவின் அடாவடித்தனங்களை சட்டரீதியாக ஒடுக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க றிஷாத் உறுதி(acmc)
நாட்டில் மீண்டும் இன ,மத வன்முறையை தூண்டும் விதமாக   நாட்டின்  உத்தியோகபூர்வமற்ற காவல் படையாக  தம்மை பிரகடனப்படுத்தி  தடைகள் இன்றி செயல்பட்டுவரும்  தீவிரவாத அமைப்பான பொது பல   சேனாவின் அடாவடித்தனங்களை சட்டரீதியாக ஒடுக்கும் நடவடிக்கைகளை அறிவித்தது போன்று  முன்னெடுக்க அமைச்சர் றிஷாத் பதியுத்தீன்  மீண்டும் உறுதிபூண்டுள்ளார் .

பொது பல சேனா போன்ற தீவிரவாத அமைப்புக்களின் அடாவடித்தனங்களை  ஜனாதிபதியும் பாதுகாப்புத் தரப்பும்  கட்டுப்படுத்த தவறியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாத் பதியுத்தீன் தெரிவித்துள்ளார் .
குறித்த தீவிரவாத  அமைப்புக்கள் இஸ்லாத்தையும் ,முஸ்லிம்களையும் அடக்கி ஒடுக்கி தாம் விரும்புவது போன்று கட்டுப்படுத்த   முயன்று வருகிறது அதற்கு இடம் கொடுக்க போவதில்லை  எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார் .
பொது பல சேனாவுக்கு எதிராக எதிர்வரும் 22 ஆம் அல்லது 23 ஆம் திகதி நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்யப் படும் என  அமைச்சர் றிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார் . ‘முஸ்லிம் குரல்’ வானொலி நிகழ்ச்சி  ஒன்றில் கலந்து கொண்டு பேசும்போதே இதனை அமைச்சர் தெரிவித்தார்.
இஸ்லாத்துக்காகவும் , முஸ்லிம்களுக்காகவும் துணிவுடன்  முன்நகர உறுதிபூண்டுள்ள அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு கட்சி ஆதரவு நிலைகளுக்கு அப்பால் பக்கபலமாக இருக்க தயாராவது அனைவரினதும் தார்மீக கடமையாகும்.

No comments:

Post Top Ad