நாட்டுக்கு சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவு ; அர்ஜூன ரணதுங்க - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

நாட்டுக்கு சர்வதேச அளவில் பெரும் தலைக்குனிவு ; அர்ஜூன ரணதுங்க


நாட்டின் அரசியல்வாதிகள் பேசும் கீழ்த்தரமான பேச்சுக்களால் நாட்டுக்கும் நாட்டின் அரசியலுக்கும் சர்வதேசத்தில் பெரும் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அரஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
களுத்துறை அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள பல அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் மிகவும் துரதிஷ்டவசமான வரவேற்பே உள்ளது.
மக்கள் நாளுக்கு நாள் அரசியல்வாதிகளை நிராகரித்து வருகின்றனர். எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தகுதியானவர்கள் அரசியலுக்கு வராததே இதற்கு காரணம்.
முன்னர் அரசியலுக்கு வந்தவர்கள் தம்மிடம் இருக்கும் பணத்தை கூட சமூகத்தின் அபிவிருத்திக்காக செலவிட்டனர்.
அன்று பணமும், சொத்துக்களும் இல்லாதவர்கள் நாடாளுமன்றத்திற்கு வரும் சந்தர்ப்பம் இருந்தது.
நாட்டுக்கு சிறந்த சேவையை வழங்கக் கூடிய புத்திசாலிகளை மக்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்தனர்.
எனினும் இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. அரசாங்கத்தின் வேட்பாளராக ஒருவர் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின் அவர் வன்முறையாளராகவும் ஊழல், மோசடிகளில் ஈடுபட்டவராகவும் வெட்கமும், அச்சமும் இன்றி சட்டவிரோதமாக பணத்தை உழைத்தவராகவும் இருக்க வேண்டும்.
இந்த தகுதிகள் இருந்தால் அரசாங்கத்தின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட முடியும்.
சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தும், கொள்ளையடிப்பில் ஈடுபடும், ரடிவுத்தனமான முட்டாள் அரசியல்வாதிகளை இந்த அரசாங்கம் தொடர்ந்து பாதுகாத்து வருவதுடன் அவர்களை ஆசிர்வதித்து வருகிறது எனவும் அரஜூன ரணதுங்க குற்றம் சுமத்தியுள்ளார்.

No comments:

Post Top Ad