பொதுபல சேனா புலிகளை விட மோசமான நிலையை கொண்டுவர முயற்சிக்கின்றது ; ரிஷாத் பதியுதீன் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 27, 2014

பொதுபல சேனா புலிகளை விட மோசமான நிலையை கொண்டுவர முயற்சிக்கின்றது ; ரிஷாத் பதியுதீன்

பொது பல சேனா அமைப்பினர் விடுதலைப் புலிகளை விடவும் மோசமான ஒரு நிலைமையை இந்த நாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றனர் என அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த 30 வருட கால யுத்தத்தின் பின்னர் நிம்மதியான சூழ்நிலை ஏற்படுமென்றும், அச்சமின்றி தொழில் செய்யலாம், பிள்ளைகளுக்கு கல்வி புகட்டலாம் என்றும் மக்கள் நம்பியிருந்த வேளையில் நாட்டில் மிகவும் மோசமான நிலையை பொதுபல சேனா அமைப்பு உருவாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
சிறுபான்மையினரின் அடையாளங்களையும், மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை, இது ஒரு பௌத்த நாடு என்று தெரிவித்து வந்த பொதுபல சேனா அமைப்பினர் இப்பொழுது அவர்களது இனத்துடனேயே மோதுகின்ற நிலை உருவாகியுள்ளது. அண்மையில் இவர்கள் பௌத்த பிக்கு ஒருவரைத் துரத்திச் சென்று ஐ பாட்டால் தாக்குதல் நடத்திய சம்பவமொன்றும் இடம்பெற்றுள்ளது.
தாங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றுவோம் என்று அண்மையில் இந்த அமைப்பு சூளுரைத்துள்ளது. பௌத்த மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் வெல்ல முடியுமா? என்றும் இவர்கள் ஜனாதிபதிக்கே சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளனர்.
அதேபோல் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்திற்கு உதவியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்திற்கு எதிராகவும் செயல்படுவார்கள்.
தாங்கள் எதனைச் செய்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வகையில் தான் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பௌத்தர்கள் அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக வேண்டும் என்று இந்த அமைப்பு தெரிவித்தது.
சிறுபான்மை இனத்தவரை அடக்க வேண்டும் என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad