தமிழ் தேசிய கூட்டமைப்பும் மன்னார் ஆயருமே முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாகவுள்ளனர்; ஹெல உறுமய - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

தமிழ் தேசிய கூட்டமைப்பும் மன்னார் ஆயருமே முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு தடையாகவுள்ளனர்; ஹெல உறுமய

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரும் மன்னார் ஆயருமே முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிராக செயற்படுவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க குற்றம் சுமத்தியுள்ளார்.
பத்தரமுல்லையிலுள்ள ஜாதிக ஹெல உறுமயவின் தலைமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் அவர்கள் வாழ்ந்த சொந்த இடங்களில் மீள் குடியேற்றப்பட வேண்டியதோடு, புத்தளத்தில் 1981 க்கு முன்னர் காணப்பட்டதைப் போன்று குடிப் பரம்பலை ஏற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இதுவே எமது கொள்கையாகும். அத்தோடு வில்பத்து தேசிய வனாந்தரமென்பது பாதுகாக்கப்பட வேண்டிய சொத்தாகும். எனவே, இதனை அழித்து மக்களை மீள் குடியேற்றுவதையும் குடிமனைகளை அமைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. அவ்வாறான நடவடிக்கைகள் சட்டவிரோதமானவையாகும்.
அது மட்டுமன்றி தற்போது வில்பத்து வடக்கு மேற்கு பிரதேசங்களில் சரணாலயப் பகுதிகளில் 43 குடும்பங்கள் குடிசைகள் அமைத்து வாழ்கின்றன. இது சட்ட விரோதமான நடவடிக்கையாகும். வனவள இலாகா மற்றும் மத்திய சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அனுமதியின்றி வனங்களை அழிக்க முடியாது. மக்கள் குடியேறவும் முடியாது.
பயங்கரவாதிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களையும் யுத்தத்தால் இடம்பெயர்ந்த சிங்களவர்களையும் மீள வடக்கில் குடியேற்ற விடாது தடுப்பவர்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப்பும் விக்னேஸ்வனுமேயாவர்.
எனவே, வில்பத்து பிரச்சினை தொடர்பில் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவரென்ற காரணத்தால் அமைச்சர் ரிஷாத் பதியூதின் மீது விமர்சனங்களை முன் வைப்பது பொருந்தாத விடயமாகும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad