கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 18, 2014

கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை


கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் முஸ்லிம்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாமொன்று அமைக்கப்பட்ட காரணத்தினால், முஸ்லிம் மக்கள் இடம்பெயர்ந்து வில்பத்து சரணாலயத்தை அண்டிய பகுதியில் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்ள முடியாது என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
முள்ளிக்குளம் பிரதேசத்தில் கடற்படை முகாம் அமைக்கப்பட்ட காரணத்தினால் ஒரே ஒரு முஸ்லிம் குடும்பம் மட்டுமே இருப்பிடத்தை இழந்தது. வேறு முஸ்லிம் குடும்பங்கள் இருப்பிடங்களை இழக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad