புலிகளோடு தொடர்புடைய அமைப்புகளை தடைசெய்தமைக்கு அரசாங்கத்துக்கு முஸம்மில் நன்றி தெரிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

புலிகளோடு தொடர்புடைய அமைப்புகளை தடைசெய்தமைக்கு அரசாங்கத்துக்கு முஸம்மில் நன்றி தெரிவிப்பு


விடுதலைப்புலிகள் அமைப்போடு தொடர்புடைய 16 அமைப்புகளை தடை செய்துள்ளமையை தமது கட்சி வரவேற்கும் அதேவேளை இந்நடவடிக்கை ஐ.நா. மனித உரிமை பேரவை கூட்டத்தொடருக்கு முன்பாகவே அரசு செய்யத் தவறிவிட்டதாகவும்  இப்போதாவது இந்நடவடிக்கையை மேற்கொண்டதையிட்டு அரசுக்கு நன்றி தெரிவித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார் விமல் வீரவன்சவின் தேசிய விடுதலை முன்னணியின் பேச்சாளர் முஸம்மில்.

வெளிநாடுகளில் இருந்து இயங்கும் குறித்த அமைப்புகள் செம்மறித் தோல் ஆட்டுத் தோல் போர்த்திய புலிகள் எனவும் விளக்கிய அவர் குறித்த அமைப்புகள் இலங்கையில் தனி நாடொன்றை உருவாக்க முனைவதாகவும் தெரிவித்துள்ள அவர் விடுதலைப் புலிகள் அமைப்பினரின் ஆயுதப் போராட்டம் தோல்வியடைந்துள்ள நிலையில் தற்போது ஐ.நா ஊடக ஈழத்தை உருவாக்க முனைவதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad