நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் மேற்கொண்ட வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு.(படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியினர் மேற்கொண்ட வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களுடனான சந்திப்பு.(படங்கள் இணைப்பு)


(பழுலுல்லாஹ் பர்ஹான் + பஹ்மி யூஸூப்)

நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வடமாகாண சபை பிரதிநிதி உள்ளிட்ட தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கடந்த வெள்ளிக்கிழமை (03.04.2014) வவுனியா வலயக் கல்விப் பணிமனைக் காரியாலயத்தில் வவுனியா மாவட்ட முஸ்லிம் பாடசாலை அதிபர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.


வவுனியா வலயக் கல்விப் பணிப்பாளர் திருமதி அன்டனி சோமராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மேற்படி சந்திப்பில் வவுனியா வலயக்கல்விப் பணிமனையின் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்ää பதினோரு முஸ்லிம் பாடசாலைகளின் அதிபர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது வவுனியா வலயக்கல்விப் பணிமனையின் கீழுள்ள வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்ää அல்-அக்ஸா மகா வித்தியாலயம்ää அரபா வித்தியாலயம்ää மதீனா வித்தியாலயம்ää ஆண்டியா புளியங்குளம் அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயம்ää அல்-ஹமி வித்தியாலயம்ää வவுனியா அல்-இக்பால் வித்தியாலயம்ää அல்-அமீன் முஸ்லிம் மகா வித்தியாலயம்ää தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயம்ää ஆணைவிழுந்தான் முஸ்லிம் மகா வித்தியாலயம்ää மற்றும் றிஸாட் பதியுதீன் முஸ்லிம் வித்தியாலயம் ஆகிய பதினோரு முஸ்லிம் பாடசாலைகளும் எதிர்நோக்கும் பௌதீகää மற்றும் ஆளணி சார் பிரச்சினைகள் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேற்படி பாடசாலைகளின் அதிபர்கள் தத்தமது பாடசாலைகளின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பிலும் கற்றல்ää மற்றும் கற்பித்தல் நடவடிக்கைகளில் மாணவர்களின் பெறுபேறுகள் தொடர்பிலும்ää தாம் மீளக்குடியேறிய பின்னர் எதிர்நோக்கிவரும் வளப் பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவாகக் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) அவர்களிடம் இது தொடர்பில் எழுத்துமூலமான கோரிக்கைகளையும் முன்வைத்தனர்.

இக்கலந்துரையாடலில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக கருத்துத் தெரிவித்த அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி) அவர்கள் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது ஒரு மாற்று முற்போக்கான சமூக அரசியல் இயக்கம் என்றவகையில் இலங்கையின் கல்விக் கொள்கை தொடர்பில் எம்மிடம் மிகத் தெளிவான நிலைப்பாடுகளும்ää கல்விக் கொள்கைகளும் காணப்படுவதாகும். அதனடிப்படையிலேயே எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியானது தமது கல்விசார் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகும் எனக் குறிப்பிட்டதோடு இலங்கையின்  கல்விக்கொள்கையானது தனது முதலாவது இலக்காக கல்விக்கூடாக நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டை ஏற்படுத்தல் வேண்டும் எனக் குறிப்பிடுகின்றது.  அந்தவகையில் நாட்டின் கல்வி முறையானது இந்நாட்டில் வாழ்கின்ற பௌத்தää இந்துää இஸ்லாம் மற்றும் கிறிஸ்த்தவ சமயங்களுக்கிடையில் புரிந்துணர்வுää பரஸ்பர நம்பிக்கைää தேசிய நல்லிணக்கம்ää ஒற்றுமை என்பனவற்றை ஏற்படுத்தக் கூடியதாக அமைதல் வேண்டும்.

நாம் இன்று அதிகம் பௌதீக வளங்களைப் பற்றிப் பேசினோம்ää ஆனால் பாடசாலையில் காணப்படும் மாணவர்களான மனித வளங்கள் குறித்தும் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால சந்ததிகளாகிய எமது மாணவர்களின் ஆன்மீகää அறிவு ஒழுக்க விடயங்களில் நாம் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும். ஆன்மீகää ஒழுக்க வீழ்ச்சியானது இன்று மாணவர்களை வெகுவாகக் பாதித்துள்ளது. இவ்வபாயத்திளிருந்து மாணவர் சமுதாயத்தை மீட்டுடுப்பதற்கு சமூக அரசியல் தலைமைத்துவங்களும் கல்விச் சமூகமும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்பதே எமது முன்னணியின் நிலைப்பாடாகும். அத்தோடு மாணவர்களுக்குத் தேவையான ஒழுக்கம் மற்றும் கல்விசார் வழிக்காட்டல்களை வழங்குவதற்கும் எமது நல்லாட்சிக்கான தேசிய முன்னணி தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனைத் தொடர்ந்து சிராஜ் மஸ்ஹ_ர்ää நஜா முகம்மத் ஆகியோரும் தமது கருத்துக்களை முன்வைத்தனர். இறுதியாக வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப் (நளீமி) கருத்துத் தெரிவித்தபோதுää இங்கு முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பில் தாம் கூடிய கவனம் எடுப்பதாகவும்ää வட மாகாண கல்வி அமைச்சருடன் இணைந்து தனது சக்திக்குட்பட்ட வகையில் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தர தாம் முயற்சி செய்வதாகவும் குறிப்பிட்டார்.


No comments:

Post Top Ad