அரபு வசந்தத்துக்கு நாம் பயந்தவர்கள் அல்ல ! ஜனாதிபதி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

அரபு வசந்தத்துக்கு நாம் பயந்தவர்கள் அல்ல ! ஜனாதிபதி


நாட்டில் அரபு வசந்தம் வருவதாக கூறி  மக்களை சிலர் வீதிக்கு அழைக்கின்றனர். அரபு வசந்தம் போன்றவைகளுக்கு நாம் பயந்தவர்கள் அல்ல.  வீதியில் இறங்கியே தான் இந்நிலைக்கு உயர்ந்துள்ளோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
 
மத்திய வங்கியின் 64 ஆவது வருடாந்த அறிக்கை வெளியீட்டு நிகழ்வு மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி  இவ்வாறு தெரிவித்தார். இங்கு ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்-
 
மார்ச் மாதத்தில் அரசாங்கம் கவிழும் என கடந்த 10 வருடங்களாக சிலர் கூறி வருகின்றனர். ஆனால் அப்படி ஒன்றும் நடைபெறவில்லை. 
 
அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டுமாயின் ஹாவர்ட் போன்ற இடங்களுக்குச் செல்லத் தேவையில்லை. தெற்கில் மெதமுலனைக்கு வந்தால் அரசாங்கத்தை கவிழ்க்கும் முறையை சொல்லித்தர முடியும். 
 
மக்களுக்கு விருப்பம் இல்லை என்றால் அரசாங்கத்தை கவிழ்க்க வேண்டியது அவசியம்தான்.  ஆனால் பலாத்காரமாக அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது. அதற்கு ஒரு போதும் இடமளிக்கமாட்டோம் எனவும் ஜனாதிபதி கூறினார்.


No comments:

Post Top Ad