மிருகங்களுக்கு இருக்கும் சலுகைகள் முஸ்லிம்களுக்கு இல்லை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 12, 2014

மிருகங்களுக்கு இருக்கும் சலுகைகள் முஸ்லிம்களுக்கு இல்லை

(tm)

1990 இல் மன்னார் மாவட்டத்தில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட அனாதரவற்ற முஸ்லிம்களுக்கு பொது பலசேனாவால் இன்று நெருக்கு வாரங்கள் ஏற்பட்டுள்ளன. மிருகங்களிற்கு கொடுக்கப்படும் சலுகைகள் கூட முஸ்லிம்களுக்கு கிடையாதா? இப்படியான ஒரு சோதனை நிலைமையே அகதி முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது என வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.


இந்த நாடு அனைவருக்கும் சொந்தமானது.அந்த வகையில் முஸ்லிம் மக்களுக்கும் சொந்தமான நாடு இது. இந்த நாட்டை அழகான முறையில் கொண்டு செல்லும் ஜனாதிபதியின் பெயரை நாசப்படுத்தும் செயல்களையும், துரோக செயல்களையும் செய்கின்ற பேரினவாதிகளின் முற்போக்கு  செயல்களையும் அடாவடி தனத்தையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சனிக்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
முஸ்லிம்கள் குற்றவாளிகளாக? எங்கே எப்போது இந்த நாட்டிற்கு எந்த விதத்தில் துரோகம் செய்தார்கள்? என்று கேட்க விரும்புகின்றேன்.  பொது பலசேனா என்றால் என்ன? இனவாதத்தை  உருவாக்குபவர்களா? மாற்று மதங்களை அழிப்பவர்களா?  இது வேண்டுமென்றால் உங்கள் நாடாக இருக்கட்டும். நாங்கள் நாட்டைக் கேட்கவில்லை, இந்த நாட்டில் பிறந்து வாழ்ந்து வருபவர்கள் நாங்கள். இங்கு இருப்பதற்கு ஒரு துண்டு காணிகளை மாத்திரமே கேட்கின்றோம். 

நாங்கள் இனவாதிகள் அல்ல, மதவாதிகளும் அல்ல, மதத்திலோ,மார்க்கத்திலோ எங்கள் முஸ்லிம் சமுதாயத்தினர் இறை அச்சத்துடன் ஒற்றுமையாகவும் அமைதியாகவும் இந்த நாட்டில் வாழ்கின்றவர்கள். தேரர்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகின்றேன், மதங்களை பேணி நடக்க வேண்டும். பௌத்த மதத்தை பொறுத்தவரை எல்லா இனத்தவர்க்கும் ஒரு கௌரவத்தை உண்டு பண்ணக்கூடிய மதமாகும்.
யாரிற்குமே வதை செய்வதையோ, மன உளைச்சலையோ கொடுக்காத ஒரு உன்னதமான மதமாகும். அந்த உன்னதமான  பௌத்த மதத்தை  அதுவும் முழுதாக படித்த ஒரு கூட்டம் காட்டு மிராண்டித்தனமாக நடப்பது ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாதொரு  விடயமாகும்.

அது மட்டுமின்றி நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. பரம்பரை  பரம்பரையாக வாழ்ந்த இடத்தில் திரும்பவும் இருப்பதற்கு அரசாங்கத்தினால் அங்கீகாரம் பெற்றுக்கிடைத்த இடங்களிலேயே இருக்கின்றோம்.  நீங்கள் சொல்லுவதை முஸ்லிம்களோ,அல்லது தமிழ் பேசும் மக்களோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை.
இந்த நாட்டில் நீங்கள் யார?; எங்களைப் போல் ஒரு பிரஜா உரிமை பெற்றவர்கள். உங்களிற்கு இருக்கிற அனைத்து உரிமைகளும் இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இன மக்களிற்கும் இருக்கிறது. என்பதை ஜனாதிபதி பலமுறை சொல்லியிருக்கிறார். 

இது உங்களுக்கு விளங்கவில்லையா? இனி இப்படியான தேவையற்ற விடயங்களில் தலையிட எந்த அருகதையும் கிடையாது. இப்படியான செயல்களை முற்றாக நிறுத்த வேண்டும். மாற்று மதங்களில் தலையிடுவதற்கு பொதுபலசேனாவிற்கு அதிகாரம் கிடையாது.

உங்களது செயற்பாடுகளை அடக்கும் நேரம் வெகு தூரத்தில் இல்லை. இறைவன் நிச்சயமாக உங்கள் செயல்களைப் பார்த்துக்கொண்டிருகக்கிறான். எங்களிடம் படைபலமோ, ஆயுதபலமோ இல்லை. ஆனால் இப்பிரச்சனையை நாங்கள் இறைவனிடமே பாரப்படுத்தியுள்ளோம்.  இதற்கான தண்டனையை இறைவனே அளிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad