திருடனுக்கு கிடைத்த அதிசய தண்டனை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

திருடனுக்கு கிடைத்த அதிசய தண்டனைபொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடிய நபரை, மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு பொலிவியாவின் அயோபாயா கிராம பகுதியில் 18 மற்றும் 19 வயது கொண்ட இரண்டு வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர்.
இவர்களை மடக்கி பிடித்த கிராம மக்கள் தண்டனை கொடுக்க எண்ணி, மரத்தில் கட்டி வைத்துள்ளனர்.
அத்துடன் விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர், தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த தண்டனையை அவர்கள் அனுபவித்துள்ளனர்.
இதன்பின் வாலிபர்களின் உறவினர்கள் அவர்கள் செய்த தவறுக்காக பணத்தினை கொடுத்த பின்னரே குற்றவாளிகளை கிராம வாசிகள் விட்டுள்ளனர்.
இதனைதொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாலிபர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மருத்துவர்கள், ஒரு வாலிபர் தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், மற்றொரு வாலிபரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad