ஞானசாரரின் குடியும் கும்மாளமும் அடங்கிய ஆதாரம் என்னிடம் உள்ளது ! வட்டரக விஜித தேரர் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

ஞானசாரரின் குடியும் கும்மாளமும் அடங்கிய ஆதாரம் என்னிடம் உள்ளது ! வட்டரக விஜித தேரர்


இன்று வில்பத்து வன பகுதியையும் இயற்கையையும் தாம் காப்பாற்றப் புறப்பட்டுள்ளதாக கூறும் பொது பல சேனா அமைப்பின் செயலாளரும் இலங்கையின் பெளத்த பேரினவாதத்தின் மொத்த உருவமுமான கலகொட அத்தே ஞானசார கடந்த செப்டம்பர் மாதம் 10ம் திகதியளவில் வில்பத்து வனப்பகுதியிக் குடியும் கும்மாளமுமக கூத்தடித்ததற்கான ஆதாரம் தம்மிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார் வடரக விஜித தேரர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற முஸ்லிம்குரல் வானொலியின் மக்கள் மன்றத்தில் கலந்து கொண்டு நேர்காணலை வழங்கியிருந்தபோதே அவர் இத்தகவலை வெளியிட்டதோடு இதற்கான ஆதாரங்களை தாம் அன்றைய தினம் ஊடக சந்திப்பின் போது வெளியிட இருந்ததாகவும் இந்நிலையிலேயே ஊடக சந்திப்பு குழப்பப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
தமது தொலைத்தொடர்புகளையும் நிறுத்தி உயிரச்சத்தில் தாம் மறைந்து வாழ்வதாகவும் இதன் போது அவர் தகவல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad