வீதியில் வேகமாக முந்தி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி (சைட்) கொடுத்துவிட்டு திரும்பிய வைத்தியரின் கார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோதி விபத்துக்குள்ளானது. காத்தான்குடியில் சம்பவம் -படங்கள் இணைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 18, 2014

வீதியில் வேகமாக முந்தி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி (சைட்) கொடுத்துவிட்டு திரும்பிய வைத்தியரின் கார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோதி விபத்துக்குள்ளானது. காத்தான்குடியில் சம்பவம் -படங்கள் இணைப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு-கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் ஹற்றன் நஷனல் வங்கிக்கு முன்னாள் 18-04-2014 இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் வைத்தியர் ஒருவரின் கார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொரியில் மோதி விபத்துக்குள்ளானது.


இதனால் மட்டக்களப்பை நோக்கி காரில் பயணித்து விபத்துக்குள்ளான வைத்தியருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை ஆனால் லொரியில் மோதியதால் காருக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன் லொரியின் பின் பகுதியும் சேதமடைந்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் விபத்துக்குள்ளான வைத்தியர் கருத்து தெரிவிக்கையில் தான் வாகனத்தை செலுத்திக்கொண்டிருக்கும் வேளையில் தனக்குப் பின்னால் வேகமாக முந்தி வந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுக்கு வழி (சைட்) கொடுத்துவிட்டு திரும்பும் வேலையில் இவ் விபத்து ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இவ் விபத்து தொடர்பில் ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.No comments:

Post Top Ad