குளோனிங் மூலம் உருவான டைனோசர் குட்டி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 04, 2014

குளோனிங் மூலம் உருவான டைனோசர் குட்டி


இங்கிலாந்தின் லிவர்பூல் ஜோன் மோர் பல்கலைக்கழகத்தினர் வெற்றிகரமான முறையில் டைனோசர் குட்டி ஒன்றை குளோனிங் மூலம் உருவாக்கியுள்ளதாக அந்த பல்கலைக்கழகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த டைனோசர் குட்டிக்கு “ஸ்பெட்” செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். குளோனிங் முறையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டைனோசர் குட்டி பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவமனையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.


டைனோசரின் மரபணு தீக்கோழி ஒன்றின் கருவில் செலுத்தி விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர். பல டைனோசர் மரபணுக்களை செலுத்தி இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக உயிரியல் பேராசிரியரான டொக்டர் ஜெரார்ட் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இவரே இந்த குளோனிங் ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கியவராவார். மரபணு மூலம் உருவாக்கப்பட்டுள்ள முதல் குளோனிங் டைனோசர் குட்டியானது மரபணு விஞ்ஞானத்தில் ஒரு மைல் கல்லாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post Top Ad