ஆப்கான் மக்களுக்கு ஒபாமா வாழ்த்து - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

ஆப்கான் மக்களுக்கு ஒபாமா வாழ்த்து


ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்தித்த அந்நாட்டு மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்கானிஸ்தானில் கடந்த 2001ம் ஆண்டு மறுசீரமைப்பு ஏற்பட்ட பிறகு நடைபெறும் முதலாவது தேர்தல் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எனவே வரலாற்று சிறப்புமிக்க தேர்தலை சந்தித்தமைக்காக ஆப்கானிஸ்தான் மக்களுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது செய்தி வாழ்த்தில் கூறுகையில், ஆப்கானிஸ்தான் வரலாற்றிலேயே முதல்முறையாக ஜனநாயக ரீதியிலான ஆட்சி மாற்றம் உறுதிசெய்யப்பட்டதையடுத்து, தேர்தலில் உற்சாகத்துடன் பங்கேற்ற ஆப்கன் மக்களுக்கு அமெரிக்க மக்களின் சார்பாக, பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
அமெரிக்க ராணுவ படை திரும்ப பெறப்பட்டதற்கு பிறகு ஆப்கான் மக்கள், தங்கள் நாட்டுக்காக முழு பொறுப்பை எடுத்திருப்பது ஆப்கானிஸ்தான் தேர்தல் வரலாற்றில் இடம் பிடித்துள்ள ஒரு முக்கிய தருணமாகும்.
மேலும் ஆப்கான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் புதிய அரசுடன் பரஸ்பர மதிப்பு மற்றும் பொறுப்புணர்வு அடிப்படையில் நல்லுறவை தொடர தயாராக இருக்கிறோம் என்றும் ஜனநாயக ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா தனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.


No comments:

Post Top Ad