பொதுபல சேனாவால் சிங்கள பௌத்தம் அழிக்கப்படுகிறது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

பொதுபல சேனாவால் சிங்கள பௌத்தம் அழிக்கப்படுகிறது


இலங்கையில் காவி உடை தரித்தவர்களால் சிங்கள பௌத்தம் அழிக்கப்பட்டு வருவதாக பிரதான ஆங்கில பத்திரிகை ஆசிரியர் தலையங்கம் தீட்டியுள்ளது.


அண்மையில் பௌத்த அடிப்படைவாத அமைப்பான பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜாதிக பலசேனாவின் பௌத்த மதகுருவான மூத்த மதகுரு ஒருவரை தகாத வார்த்தைகளால் திட்டியதும், அவரின் பத்திரிகையாளர் சந்திப்பை தடுத்த சம்பவத்தையும் கொண்டு இந்த ஆசிரியர் தலையங்கத்தை ஆங்கில பத்திரிகை எழுதியுள்ளது.
இலங்கையின் அரசியல் வரலாற்றில் இதுவரை, குறிப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பத்திரிகையாளர் சந்திப்பு கூட மாற்று தரப்பினரால் பிரச்சினைக்கு உட்படுத்தப்படவில்லை.
எனினும் பௌத்த மதகுரு என்ற சொல்லப்படுகின்ற ஞானசார தேரரால் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று குழப்பப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
பௌத்த மதத்தை பாதுகாப்பதாக கூறும் இந்த ஞானசார தேரர் போன்றோர் பௌத்த மத வளர்ச்சிக்காக எதனை செய்திருக்கிறார்கள்?
இந்தநிலையில் கடந்த இரண்டு வருட காலப் பகுதிக்குள் மிகவும் வளர்ச்சி பெற்றுள்ள பொதுபலசேனா, இராவணா பலய போன்ற பௌத்த அமைப்புக்களுக்கு எங்கிருந்த நிதிகள் வருகின்றன என்பது சந்தேகமே.
இலங்கையின் பௌத்த வரலாற்றில், பண்டார நாயக்கவை, புத்திரக்கித மற்றும் சோமராம ஆகிய தேரர்கள் கொலை செய்தபோது பௌத்த பிக்குகளுக்கு மாசு கற்பிக்கப்பட்டது.
இதனையடுத்து இந்த பௌத்த கலசாரத்தை தற்போதுள்ள பொதுபலசேனா போன்ற அமைப்புக்கள் முன்கொண்டு செல்வதாக அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்த அமைப்புக்கள் பெரும்பாலும் சிறுபான்மை இனத்தவர்களை தாக்கும் வகையில் செயற்பட்டு வருகின்றன. இதனால் பௌத்த மதத்துக்கு மாத்திரமல்ல. நாட்டுக்கும் பாரிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
ஒரு பௌத்த பிக்கு மற்றும் ஒரு பௌத்த பிக்குவை பார்த்து “மினியோ”( மனிதா) என்ற கூறும் போது அங்கு பௌத்த பிக்குவின் கௌரவம் எந்தளவு பாதுகாக்கப்படுகின்றது என்பதை காணமுடிகிறது.
அசோக மன்னர் கூறிய பௌத்த சிந்தனைகளை பொறுத்தவரை பொறுமையும் சகிப்பு தன்மையுமே பௌத்தத்தில் முக்கிய இடம் பெறுகின்றன.
எனினும் தற்போது இலங்கையில் பார்க்கும் போது அந்த இரண்டும் இல்லாதுபோய் பௌத்த பாரிய பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளமை வெளிச்சமாகியுள்ளது.
இலங்கையின் பௌத்த மதத்தின் தலைவர்களாக கருதப்படும் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகாநாயக்கர்கள் கூறும் கருத்துக்களும் நகைச்சுவையாக இருக்கின்றன.
இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையும், கசினோவும் ஒழிக்கப்படும் போது சமூகத்தில் ஒழுக்கம் பேணப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
எனினும் தமக்கு கீழ் உள்ள பௌத்த பிக்குகளை கட்டுப்படுத்தமுடியாதிருக்கும் போது நிறைவேற்று அதிகாரத்தை குறை கூறி எதுவும் நடக்கப் போவதில்லை என்று ஆங்கில பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பௌத்த அமைப்புக்கள் அரசியல் நோக்கத்துடன் செயற்படுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஏனெனில் அரசியல்வாதிகள் இந்த பௌத்த அமைப்புக்களின் அராஜகத்தை கண்டு மௌனமாகவே உள்ளனர்.
கலகொட அத்தே ஞானசார தேரரை பொறுத்தவரை அவர் இறுதிப் போருக்கு என்ன பங்களிப்பை செய்திருக்கிறார்?
எதனை வைத்துக் கொண்டு அவர் சிங்களத்தையும் பௌத்தத்தையும் காக்கப் போவதாக கூறிவருகிறார் என்று பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

No comments:

Post Top Ad