மலேசிய விமானம் குறித்து வதந்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் ! அரசு அறிவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

மலேசிய விமானம் குறித்து வதந்திகளை பரப்பிய ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் ! அரசு அறிவிப்பு


மாயமான விமானம் குறித்து தவறாக தகவலை பரப்பிய ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு போடப்படும் என மலேசிய அரசு அறிவித்துள்ளது.
மலேசியாவில் இருந்து கடந்த மார்ச் 8ம் திகதி 239 பயணிகளுடன் சீனா புறப்பட்ட mh370 விமானம் மாயமானது குறித்து தற்போது வரை சரியான தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் விமானம் காணாமல் போனதிலிருந்து சுமார் மூன்று வாரங்களுக்கு மேலாக பல ஊடகங்கள் பல்வேறு கட்டு கதைகளை வெளியிட்டு வருகின்றன.
இதனால் தவறான தகவல்களை பரப்பும் ஊடகங்கள் மீது மான நஷ்ட வழக்கு தொடருவது குறித்து மலேசிய அரசு ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து மலேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஹிஸ்ஹமுதின் ஹூசைன் கூறுகையில், விமானம் குறித்து தவறான தகவலை பரப்பிய ஊடகங்கள் மீதான ஆதாரங்களை சேகரித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இப்பொறுப்பை நாட்டின் அட்டர்னி ஜெனரல் மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளது எனவும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post Top Ad