பொதுபல சேனா அரசாங்கத்தையும் கவிழ்க்கும் ! ஞானசார - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 22, 2014

பொதுபல சேனா அரசாங்கத்தையும் கவிழ்க்கும் ! ஞானசார

(ad)

தேவையென்றால் அரசாங்கத்தை கவிழ்க்கவும் அரசாங்கத்தை ஏற்படுத்தவும் பொது பல சேனா அமைப்பால் முடியும் என அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 


ஆனால் ராஜபக்ஷ அரசாங்கத்தை கவிழ்க்க பொது பல சேனா அமைப்புக்கு எந்த தேவையும இல்லை என கொழும்பில் இன்று (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் குறிப்பிட்டார். 

பொது பல சேனா சூழ்ச்சி செய்வதாக சில அமைச்சர்கள் குற்றம் சுமத்துவதாகவும் முடிந்தால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு அவர் சவால் விடுத்துள்ளார். 

அமைச்சர் ரவுப் ஹக்கீம் உள்ளிட்ட முஸ்லிம் தலைவர்கள் சிலர் முஸ்லிம் சகோதரத்துவத்தை பயத்திற்கு உள்ளாக்கி வைத்திருப்பதாகவும் இவர்கள் பொது பல சேனாவுடன் மோதி முஸ்லிம் மக்கள் முன்னிலையில் எதிர்ப்பு போல் காட்டி வருவதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

மேலும் அமைச்சர் வாசுதேவ நாட்டில் ஒருமைப்பாட்டை ஏற்படுத்துவதாக கூறி வருகின்ற போதும் அவரது மனைவி ஜெனீவா சென்று இலங்கையில் ஒருமைப்பாடு இல்லை என கூறுவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். 

வாசுதேச நாணயக்கார பொய்களைக் கூறி வருகின்ற போதும் இலங்கையில் முஸ்லிம் அடிப்படை வாதிகள் இருப்பதாக உண்மையை ஒத்துக் கொண்டுள்ளதாக ஞானசார தேரர் சுட்டிக்காட்டியுள்ளார். 

No comments:

Post Top Ad