இரு சேனாக்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி ! டிலான் பெரேரா - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 21, 2014

இரு சேனாக்களுக்கும் வெளிநாடுகளிலிருந்து நிதியுதவி ! டிலான் பெரேரா


பொதுபல சேனாவுக்கு டொலர் மற்றும் பவுண்களில் நிதி கிடைத்து வருகிறது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஜாதிக பல சேனாவுக்கு மத்திய கிழக்கில் இருந்து தினார்களும், ரியால்களும் நிதியுதவியாக கிடைத்து வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால் இந்த இரண்டு அமைப்புகளும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என பதுளையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த இரண்டு அமைப்புகளும் தேசிய மற்றும் மத ஐக்கியத்தை சீர்குலைத்து வருகின்றன.
வெளிநாடுகளில் இருந்து நிதியை பெற்று வரும் இந்த அமைப்புகள் நாட்டின் வரலாற்றில் கிடைத்த உன்னத பௌத்த மதத்தை விற்று வருகின்றனர்.
பௌத்த மதத்தை திரிபுப்படுத்தி தமது மடியை நிரப்பி கொள்கின்றனர். நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்க ஜனாதிபதி மேற்கொண்ட அர்ப்பணிப்பை நாங்கள் நன்கு அறிந்துள்ளோம்.
உயிர்களை தியாகம் செய்தே நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்தோம் எனவும் அமைச்சரி் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post Top Ad