மூதூரை சுத்தப்படுத்துவோம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 18, 2014

மூதூரை சுத்தப்படுத்துவோம்(அபு பைஸான்)

தற்பொழுது மூதூர் முழுவதும் மிக வேகமாக டெங்கு நோய் பரவி வருகிறது. இந்த டெங்கு நோய் தாக்கத்துக்கு இலக்காகி அதிகமான மக்கள் நோயுற்றிருப்பதை மூதூர் தள வைத்தியசாலை வட்டார தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளது.


இந்நிலையில் நாளை மறுதினம் 2014-04-20 ஞாயிற்றுக்கிழமை மூதூர் முழுவதிலும் பாடசாலைகள் மத வழிபாட்டுத் தளங்கள் , வீடுகள் போன்றவற்றை சுத்தப்படுத்துமாறு மூதூர் பிரதேச மக்களிடம் திருகோணமலை சுகாதார தரப்பினரும்,பொலிஸாரும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதே போன்று ஊர் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டிருக்கிறதா என்பதனை ஆராயும் நோக்கில் எதிர்வரும் திங்கட் கிழமை திருகோணமலை சுகாதார பிரிவினரும் , பொலிஸாரும் இணைந்து மூதூர் முழுவதுமாக ஆராயவுள்ளதாகவும். இன்றைய ஜூம்ஆ தொழுகையின் பின்னர் மூதூரிலுள்ள பள்ளவாசல்களில் அறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad