அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Saturday, April 05, 2014

அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி


சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அரையிறுதிப் போட்டிகளில் தோல்வியைத் தழுவாத அணித்தலைவர் என்ற பெருமையை மஹேந்திர சிங் தோனி தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

உலக இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் மஹேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி 6 விக்கட்டுக்களால் வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
மிர்பூரில் நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாபிரிக்கா நிர்ணயித்திருந்த 173 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை , இந்திய அணி 19.1 ஓவரிலேயே கடந்தது.
போட்டியின் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய இந்திய அணி வீரர் அஜின்கயா ரஹானே மற்றும் ரோஹித் ஷர்மா ஆகியோர் முதல் 10 ஓவர்களுக்குள் ஆட்டமிழந்தனர்.
அதன் பின்னர் களமிறங்கிய விராட் கோஹ்லி சர்வதேச இருபதுக்கு-20 போட்டியில் தனது 7 ஆவது அரைச்சதத்தை கடந்து 72 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்ளை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது.
அணித்தலைவர் பிளஸிஸ் பெற்ற 58 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக் கொண்ட அதிக பட்ச ஓட்டங்களாகும்.
பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிச்சந்தரன் அஷ்வின் 3 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.
இதற்கமைய நாளை நடைபெறவுள்ள உலக இருபதுக்கு-20 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி இலங்கையை சந்திக்கின்றது.

No comments:

Post Top Ad