மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீ விபத்து (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 04, 2014

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தீ விபத்து (படங்கள் இணைப்பு)


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விடுதி களஞ்சியசாலையில் இன்று அதிகாலை பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் எம்.எஸ்.இப்றாலெவ்வை தெரிவித்தார்.
இவ்வைத்தியசாலையின் 19ஆம் 20ஆம் விடுதிகளுக்குச் செல்லும் வழியிலுள்ள பழைய களஞ்சியசாலையிலேயே தீ விபத்து ஏற்பட்டதாகவும் வைத்தியசாலை ஊழியர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் பணிப்பாளர் தெரிவித்தார்.
மின்னொழுக்கு காரணமாக தீ பரவியிருக்காலமெனத் தெரிவித்த அவர், இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டார்.
இக்களஞ்சியசாலையிலிருந்த பழைய பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. இங்கு கழிக்கப்பட்ட சேலைன் போத்தல்கள் மற்றும் இன்னும் சில மருந்துப் பொருட்கள் இருந்ததாகவும் அவர் கூறினார்.
மேலும், இத்தீ பரவியபோது 19ஆம் 20ஆம் விடுதிகளுக்கோ அல்லது அங்கு தங்கியிருந்த நோயாளர்களுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
No comments:

Post Top Ad