கடலுக்கடியில் தொடங்கியது மலேசிய விமானம் தேடும் முயற்சி - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Friday, April 04, 2014

கடலுக்கடியில் தொடங்கியது மலேசிய விமானம் தேடும் முயற்சி


விபத்துக்குள்ளானதாகக் கருதப்படும் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தைத் தேடும் முயற்சி, இன்று இந்தியப் பெருங்கடல் பகுதியில், கடலுக்கடியில் தொடங்கியிருக்கிறது.
விமானத்தின் விமானிகள் அறையில் நடந்திருக்கூடிய உரையாடல்கள் மற்றும் பிற தரவுகளை ஒலிப்பதிவு செய்திருக்கும் கறுப்புப் பெட்டியிலிருந்து வரும் ஒலியைக் கேட்டு அது இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கும் கருவிகளை கப்பல்கள் இழுத்துச் செல்கின்றன.
இரண்டு கப்பல்கள் இந்த இழுவைக் கருவிகளுடன் கடலுக்கடியில் சுமார் 240 கிமீ நீளமுள்ள பாதையில் இந்த கறுப்புப் பெட்டி விழுந்திருக்கக் கூடிய இடத்தைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன.
இது தவிர , இந்தக் கடல் பகுதியை, வெள்ளிக்கிழமை, 14 விமானங்களும், ஒன்பது கப்பல்களும் தேடும்.
ஆஸ்திரேலியக் கடற்படை கப்பலான, 'ஓஷன் ஷீல்ட்' ,மற்றும் எச்.எம்.எஸ் எக்கோ என்ற கப்பலும் இந்தக் கடலுக்கடியில் கறுப்புப் பெட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கின்றன.
இந்த விமானத்தின் கறுப்புப் பெட்டி, பாட்டரியின் மூலம் இயங்குகிறது. அதன் பாட்டரிகள் 30 நாட்களுக்கு மட்டுமே இயங்கக்கூடிய சக்தி பெற்றவை. இந்த 30 நாள் காலக்கெடு நெருங்குவதால், ( விமானம் காணாமல் போனது மார்ச் 8ம் தேதி) , தேடும் குழுக்களுக்கு இதைத் தேட இன்னும் ஒரு சில நாட்களே எஞ்சியிருக்கின்றன.
'நல்ல தரவுகளை வைத்தே தேடல் முயற்சி'
கிடைத்திருக்கும் செய்கோள் தரவுகளை வைத்தே இந்த தேடும் பகுதி வரையறுக்கப்பட்டிருக்கிறது, ஆனால் இந்தத் தரவுகள் தொடர்ந்து ஆராயப்பட்டு மேலும் மேம்படுத்தப்பட்டுவருகின்றன என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.
தற்போதைக்கு இந்தத் தேடல் முயற்சி நடக்கும் பகுதி என்பது, கிடைத்திருக்கும் தரவுகளிலேயே மிகவும் நம்பகமான தரவுகளை வைத்தே நடக்கிறது என்றும் அவர்கள் கூறினர்.
தேடல் முயற்சி நடக்கும் இந்தப் பகுதி சுமார் 2.17 லட்சம் சதுர கிமீ பரப்பளவு கொண்டது.ஆஸ்திரேலிய நகரான பெர்த்துக்கு சுமார் 1,700 கிமீ வட மேற்கே இந்தப் பகுதி அமைந்திருக்கிறது.
இப்பகுதியில் வானிலை வெள்ளிக்கிழமை நன்றாக இருப்பதாகவும், சுமார் 10 கிமீ தூரம் அளவுக்குப் பார்க்கக்கூடியதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேடல் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குழுவினரை சந்தித்த ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபாட், " ஒரு பெரிய விமானம் எளிதாகப் பார்த்துவிடக் கூடியதுதான் என்று தோன்றும், ஆனால் ஏறக்குறைய திடீரென்று காணாமல் போன, அதுவும், அணுக முடியாத பகுதியில் காணாமல் போன ஒரு பெரிய விமானத்தைத் தேடுவது என்பது ஒரு அசாதாரணமான சவால் என்றார்.

No comments:

Post Top Ad