பொதுபல சேனாவில் உள்ளவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 24, 2014

பொதுபல சேனாவில் உள்ளவர்களை கைது செய்து தூக்கிலிட வேண்டும்


பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து, தூக்கிலிடுமாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் பொது பல சேனா மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் துணை போகின்றமை தொடர்பிலும் அவர்கள் கண்டனம் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
ஆனால் இந்த யுத்தத்தில் அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்றும் எதுவும் இல்லை.
அதன் வெளிப்பாடே தற்போதும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான காரணம் என்று அவர்கள் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவை தளமாக கொண்ட பயங்காரவாத ஆராச்சி ஒழுங்கமைப்பு, பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலபடுத்தியுள்ளமையையும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post Top Ad