காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்றார்.படங்கள் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்றார்.படங்கள்(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பணிமனைக்குட்பட்ட காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடந்த இரண்டரை வருட காலமாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிவரும் பொலிஸ் பரிசோதகர் பி.எல் அஜித் பிரசன்ன இலங்கை பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்று முதல் தடவையாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருவதை வரவேற்கும் நிகழ்வும்ää கௌரவிப்பு நிகழ்வும் காத்தான்குடி பொலிஸ் நிலைய சிறு குற்றப்பிரிவின் புதிய காரியாலத்தில் 28-04-2014 நேற்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.


காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஸார திலங்க ஜெயல தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த லொகுகே கலந்து கொண்டார்.

இதன் போது பொலிஸ் திணைக்களத்தினால் பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவியுயர்வு பெற்ற காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.எல் அஜித் பிரசன்ன பிரதான பொலிஸ் பரிசோதகர் கிரிசாந்த லொகுகேவினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட்ää காத்தான்குடி பொலிஸ் நிலைய பிரிவு பொறுப்பதிகாரிகள் உட்பட ஆண்ääபெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post Top Ad