யாழ்ப்பாண முஸ்லிம்களின் விபரங்களடங்கிய 'மணிபல்லவத்தார் சுவடுகள்' நூல் வெளியீடு (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

யாழ்ப்பாண முஸ்லிம்களின் விபரங்களடங்கிய 'மணிபல்லவத்தார் சுவடுகள்' நூல் வெளியீடு (படங்கள் இணைப்பு)


யாழ்ப்பாண முஸ்லிம்களின் விபரங்களடங்கிய 'மணிபல்லவத்தார் சுவடுகள்'  என்ற தலைப்பிலான நூல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) நீர்கொழும்பு சோன்டர்ஸ் மண்டபத்தில் வெளியிடப்பட்டது. 
 யாழ் பட்டதாரியான எம்.எஸ்.எம் ஜான்ஸின் எழுதித் தொகுத்துள்ள இந்த நூலில் இலங்கையில் முதல் பட்டதாரி, முதல் அட்வகேட், முதல் விமானி, முதல் சிவில் உத்தியோகத்தர், செனட்டர், முதல் மேன் முறையீட்டு நீதிபதி, முதல் பெண் வைத்தியர் போன்று பல்வேறு துறைகளில் மிளிர்ந்த யாழ்ப்பாண முஸ்லிம்களின் விபரங்களடங்கியுள்ளன.
 
அத்துடன் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாறு, யாழ் முஸ்லிம் பாடசாலைகளின் வரலாறு, யாழ் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட சோக நிகழ்வுகள், அகதி முகாம்களில் மக்கள் பட்ட துன்பங்கள், யாழ் பள்ளிவாசல்களின் வரலாறு, விளையாட்டுத் துறை வரலாறு, தற்போதுள்ள யாழ் முஸ்லிம்களின் சனத்தொகை போன்ற பல்வேறு வரலாற்று விடயங்களுடன் இந்நூல் தொகுக்கப்பட்டுள்ளன.
 
நூல் வௌிளியீட்டு விழாவின் பிரதம அதிதியாக பாராளுமன்ற உறுப்பினரும் தகவல் ஊடக அமைச்சின் மேற்பார்வை எம்.பியுமான ஏ.எச்.எம். அஸ்வர், சிறப்பு அதிதியாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட மற்றும் பல பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 
பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் இங்கு உரையாற்றுகையில்-
 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவுக்கு நான் பந்தம் பிடிப்பதாக சிலர் குறைகூறுகின்றனர். அதையிட்டு நான் கவலைப்படுவதில்லை. ஆட்சியில் உள்ள தலைவருக்கு ஆதரவு வழங்குவதையே அவர்கள் இவ்வாறு கூறுகின்றனர். 
 
எமது மறைந்த முஸ்லிம் தலைவர்களான ரி.பி. ஜாயா முதல் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் வரையிலான அனைவரும் ஆட்சியாளர்களுக்கு ஆதரவு வழங்கியே முஸ்லிம் சமுகத்துக்கு தேவையானவற்றைப் பெற்றுக்கொடுத்தனர். அந்த வழியையே நான் பின்பற்றுகிறேன்.
 
தமது தாயக மண்ணில் இருந்து பலவந்தமாக புலிகளினால் வெளியேற்றப்பட்ட மக்கள் மீண்டும் யாழ்ப்பாணத்தில் குடியேறுவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இன்று  முட்டுக்கட்டை போடுகின்றனர். இது பெரும் அநீதியாகும்.
 
மேலும் வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீண்டும் இணைக்கும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபடுகின்றனர். அதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். அது தமிழ் ஈழம் அமையவே வழி வகுக்கும்.
 
எனது அரசியல் வாழ்வில் 25 வருடங்களை நான் பூர்த்தி செய்துவிட்டேன். யார் என்ன சொன்னாலும் இக்காலப் பகுதியில் என்னால் முடிந்த அனைத்து சேவைகளையும் முஸ்லிம் சமுகத்துக்காக செய்துள்ளேன். இனியும் என்னால் முடிந்ததைச் செய்வேன்.
 
நூலாசிரியர் ஜான்சின் யாழ்ப்பாண மக்களின் வரலாற்றுப் பதிவுகளைத் தொகுத்து நல்லதொரு நூலை உருவாக்கியுள்ளார். அவரது முயற்சி பாராட்டுக்குரியது.
 
அதேபோன்று யாழ் முஸ்லிம்களின் வரலாற்றுத் தகவல்கள்,  கலை கலாசாரப் பதிவுகள் இலக்கியங்களாக வெளிவரவேண்டும். அதற்கான ஒத்துழைப்பை நாம் வழங்கத் தயாராக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
 
சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்ட முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் உட்பட மற்றும் பலர் இந்த விழாவில்  உரையாற்றினர்.
 
யாழ்ப்பாண முஸ்லிம்களில் பல்வேறு துறைகளிலும் திறமைகளை வெளிப்படுத்தியோருக்கு இவ்விழாவில் பாராட்டும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. No comments:

Post Top Ad