டுபாயில் அநாதரவான இலங்கைச் சிறுமி தந்தையுடன் இணையவுள்ளார் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 24, 2014

டுபாயில் அநாதரவான இலங்கைச் சிறுமி தந்தையுடன் இணையவுள்ளார்


டுபாயில் அநாதரவாக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி ஒருவர் மீண்டும் அவரின் தந்தையுடன் இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. த கல்ப் நியூஸ் இதனைத் தெரிவித்துள்ளது.
எலீனா என்ற குறித்த சிறுமியின் தந்தை கடனட்டை நிலுவையை செலுத்தியிராத நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு ஒரு வருட சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது.
எலீனா பிறந்து மூன்று மாதங்களேயான நிலையில், அவரது தாயாருக்கு டுபாய் அரசாங்கம் வாழ்நாள் நுழைவு தடை விதித்து, இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது.
இந்த நிலையின் தந்தையின் கைதைத் தொடர்ந்து அநாதரவாக்கப்பட்ட அவர், டுபாயில் அநாதை ஆதரவு இல்லம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் ஒரு வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டிருந்த அவரது தந்தை மேன்முறையீடு செய்திருந்ததன் அடிப்படையில், அவரது தண்டனை தற்போது மூன்று மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அவர் குறைக்கப்பட்ட மூன்று மாத சிறை தண்டனையை ஏற்கனவே அனுபவித்துவிட்ட நிலையில், அவர் இந்த மாதத்துக்குள் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவார் என்றும், அவருடன் அவரது மகளும் இணைக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad