கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் -மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் -மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை (படங்கள் இணைப்பு)(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பில் இடம்பெறும் வீதி  விபத்துக்களை தடுக்க விஷேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.


இதன் ஓர் அங்கமாக  மட்டக்களப்பு நகரில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறும் பகுதிகளில் மக்கள் அவதானமாக செல்வதற்கும் போக்குவரத்து சட்டத்தை மதிக்கும் வாகன சாரதிகளுக்கு நன்றி செலுத்தியும் விழிப்புணர்வு பதாதைகள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ளது.

இதில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் சட்டத்தை மதிக்கும் சாரதிகளை அன்புடன் வரவேக்கின்றோம் என்றும் தமிழ் ääசிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆஷியா பௌண்டேஸன் மற்றும் ஈ.எஸ்.சி.ஓ ஆகிய நிறுவனங்களின் அனுசரனையுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர ää மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு  பொறுப்பதிகாரி சமன் குமார ஆகியோரின் ஆலோசனையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.No comments:

Post Top Ad