பொதுபல சேனாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 08, 2014

பொதுபல சேனாவுக்கு எதிராக முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்


பொதுபல சேனாவின் தற்போதைய நடவடிக்கைகள் கவலை தருவதாக குறிப்பிட்டு, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
அண்மைக்காலமாக பொதுபல சேனா அமைப்பினர், முஸ்லிம் மக்கள் மீது பிரச்சினையை உருவாக்க முயற்சிப்பதாக குறிப்பிட்டு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம் கவுன்சில், இலங்கை ஜம்மத் இ- இஸ்லாமியா, அனைத்து இலங்கை ஜம்மத்துல் உலமா மற்றும் ஏனைய 12 முஸ்லிம் அமைப்புக்கள் இணைந்து இந்தக் கடித்தினை அனுப்பியுள்ளன.
சில நேரங்களில் பொதுபல சேனா அமைப்பானது, முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கில் குடியமர்த்தப்பட்ட முஸ்லிம்கள் தொடர்பில் பொது பலசேனா அமைப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். வில்பத்து தேசிய பூங்காவில் மீள் குடியேற்றம் செய்யப்பட்டமை குறித்து தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர்.
அரசாங்கம் மற்றும் சர்வதேச சமூகம், இடம்பெயர்ந்த முஸ்லிம் சமூகங்களை மீள்குடியேற்றம் செய்ய முன்னுரிமை அளிக்கவில்லை.
உண்மையில், இரக்கமுள்ள முஸ்லிம் நாடுகளைச் சேர்ந்த நன்கொடையாளர்கள் மூலம் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களுக்கு வீட்டு உதவி வழங்கப்பட்டுள்ளது.
இவை இலங்கையின் வெளிநாட்டு உதவிக்கான விதிகளை மீறிச் செயற்படுவதாக சில பௌத்த தீவிரவாதக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அந்த வகையில், பொதுபல சேனாவால் குழம்பம் மற்றும் மோசமாக உணர்வுகள் ஏற்படுகின்றன என அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், கடந்த வருடம் பௌத்த தீவிரவாத குழுக்களினால், முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பகிரங்கமாக அறிக்கைகள் வெளியிட்டமையினை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad