பொது பல சேனாவின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார் -மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 17, 2014

பொது பல சேனாவின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார் -மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஜனாதிபதி மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது.



(பழுலுல்லாஹ் பர்;ஹான்)

கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பிரச்சினைகளின் போதெல்லாம் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் வழிகாட்டல்களை ஏற்று அவதானமாகவும்ää நிதானமாகவும் நடந்து நாட்டின் அமைதிக்கும்ää சமாதானத்துக்கும்ää சகவாழ்விற்கும் தமது முழுமையான பங்களிப்பை வழங்கி வரும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவருக்கும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.


எத்தகைய பிரச்சினையாயினும் முஸ்லிம்களாகிய நாம் அல்-குர்ஆன்ää அஸ்-ஸ_ன்னாவின் அடிப்படையிலும்ää ஸஹாபாக்களினதும்ää ஸலபுஸ்ஸாலிஹீன்களினதும் முன்மாதிரிகளின் அடிப்படையிலுமே அதற்கான தீர்வைக் காண முயற்சிக்க  வேண்டும் என்பதை ஜம்இய்யதுல் உலமா அனைத்து முஸ்லிம்களுக்கும் நினைவூட்ட விரும்புகின்றது.

பல சமூகங்களுடனும்ää சமயத்தவர்களுடனும் சேர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்கள் சமூக ஒற்றுமையைக் கடைபிடிக்கும் அதே நேரத்தில் சகோதர இனங்களோடும்ää பிற சமயத்தவர்களோடும் நல்லுறவு பேணி நடந்து கொள்கின்றனர் என்பது வரலாற்று உண்மையாகும். இதனை தொடர்ந்தும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதை ஜம்இய்யா வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

எச்சந்தர்பத்திலும் ஒரு முஸ்லிம் மாற்றுமத சகோதரர்களின் தெய்வங்களை இம்சிக்க இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாற்று மதங்கள் விடயத்தில் அல்-குர்ஆன் பின்வரும் அழகிய வழிகாட்டலை எமக்குத் தந்திருக்கிறதுää
“அவர்கள் அழைக்கும் அல்லாஹ் அல்லாதவற்றை நீங்கள் திட்டாதீர்கள்; (அப்படி நீங்கள் திட்டினால்) அவர்கள் அறியாமையின் காரணமாக வரம்பை மீறி அல்லாஹ்வைத் திட்டுவார்கள்” (அன்ஆம்: 108)
எந்தவொரு மதத்தையும் ஏசுவதையோää தரக்குறைவாகப் பேசுவதையோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

ஆயினும்ää இத்தகைய மதச்சகிப்புத்தன்மையையும்ää மனிதாபிமானத்தையும்ää மனித நேயத்தையும் போதிக்கின்ற இஸ்லாத்தையும்ää முஸ்லிம்களின் தூய வேதமான அல்-குர்ஆனையும் அண்மைக் காலமாக ‘பொது பல சேனா’ என்ற அமைப்பும்ää அதனைச் சார்ந்தவர்களும் கீழ்த்தரமாக சாடியும்ää அடிப்படையில்லாத போலியான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி விமர்சித்தும் வருகின்றமை முஸ்லிம் சமூகத்தை விசனம் கொள்ளச் செய்துள்ளது.

அல்-குர்ஆன் ‘தகீய்யா’ எனும் ஒரு கொள்கையைப் போதிப்பதாகவும் அக்கொள்கை பிற சமயத்தவர்களை ஏமாற்றுவதற்கும்ää அவர்களின் உடமைகளைக் கைப்பற்றுவதற்கும்ää அவர்களது சொத்துகளை அபகரிப்பதற்கும் அனுமதிப்பதாகவும் அமைந்திருக்கின்றது என சமீபத்தில் ‘பொது பல சேனா’வின் செயலாளர் அல்-குர்ஆன் மீது மிகப் பெரும் அபாண்டமொன்றை சுமத்தியுள்ளார். இவ்வாறான கூற்று உலக முஸ்லிம்களை பொதுவாகவும்ää இலங்கை வாழ் முஸ்லிம்களைக் குறிப்பாகவும் மிகவும் மனவேதனையடையச் செய்துள்ளது.

இந்த மத நிந்தனை தொடர்பான விவகாரத்தை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாண்புமிகு ஜனாதிபதி அவர்களினதும் மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் அவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக உரிய தரப்பினர் காத்திரமான நடவடிக்கைகளை உடன் மேற்கொள்வர் என ஜம்இய்யா எதிர்பார்க்கிறது. பல முஸ்லிம்கள் பொலிஸ் நிலையங்களில் முறையீடுகளை பதிவு செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.

எனவேää இலங்கை வாழ் முஸ்லிம்கள் என்றும் போல நிதானமாகவும்ää பொறுமையுடனும் நடந்து கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக்கௌ;கிறது. மேலும் எதிர்வரும் ஜூம்ஆத் தொழுகையில் இனங்களுக்கிடையிலான சகவாழ்வு ஏற்படுவதற்காகவும்; நாட்டின் அமைதிக்காகவும் பிரார்த்திக்குமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா அனைவரையும் வேண்டிக் கொள்கிறது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ முபாறக் கையொப்பமிட்டு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad