தென் அமெரிக்காவில் ஈகுவடார் நாட்டில் எரிமலை வெடித்ததில் கடும் சீற்றம் (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

தென் அமெரிக்காவில் ஈகுவடார் நாட்டில் எரிமலை வெடித்ததில் கடும் சீற்றம் (வீடியோ இணைப்பு)


தென் அமெரிக்காவில் உள்ள ஈகுவடார் நாட்டில் எரிமலை வெடித்ததில் கடும் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈகுவடார் நாட்டின் தலைநகர் கொய்டோவில் இருந்து சுமார் 130 கிலோமீற்றர் தூரத்தில் துங்குராகுவா என்ற எரிமலை உள்ளது.

இந்த எரிமலை கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து குமுற தொடங்கியதால் லேசான புகை வெளியேறியது.
மேலும் இது மீண்டும் வெடிக்க தயாராக உள்ளதாக கருதப்பட்டதால், எரிமலையை சுற்றியுள்ள கிராம மக்கள் வெளியேற உத்தரவிடப்பட்டனர்.
இந்நிலையில் கிராம மக்களும் படிப்படியாக வெறியேறி வந்ததையடுத்து, கடந்த 4ம் திகதி அந்த எரிமலை வெடித்து சிதறியது.
எனினும் இதுவரை இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேதமதிப்பு குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.


No comments:

Post Top Ad