மூதூர் நகரம் முழுவதும் பாரிய சிரமதானம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 20, 2014

மூதூர் நகரம் முழுவதும் பாரிய சிரமதானம் (படங்கள் இணைப்பு)(மூதூர் முறாசில்)

மூதூர் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சலானது தீவிரமாகப் பரவி வருவதைத் தொடர்ந்து மூதூர் நகரம்  முழுவதும் இன்று ஞாயிற்றுக் கிழமை  பாரிய  சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.


மூதூர் பிரதேச சபை மற்றும் பட்டதாரிகள் சங்கம் ஆகியன இணைந்து  ஏற்பாடு செய்த இச்சிரமதானப் பணியில் சமூக நிறுவனங்களைச் சேர்ந்த உறுப்பினர்களும்  பொதுமக்களுமென நூற்றுக் கணக்கானோர் கலந்து கொண்டு,வீதிகள் மற்றும்  பொது இடங்களைச்; சுத்தமாக்குவதில் ஈடுபட்டனர்.
இதேவேளை, சுகாதாரத் திணைக்களத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரீசோதகர்கள்,பொது சுகாதார வெளிக்கள உத்தியோகத்தர்கள் பூச்சியியல் குழு உத்தியோகத்தர்கள்; மற்றும் சுகாதார  ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினர் பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரோடு இணைந்து வீடு வீடாகச் சென்று நுளம்பு பெருக்கத்திற்கு வழிவகுக்கும் ஏதுக்கள் சம்பந்தமாக பொது மக்களுக்கு அறிவூட்டுவதிலும்  ஈடுபட்டனர்.

இதன்போது பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையிலான குழுவினர்  மூதூருக்கு விஜயம் செய்து டெங்கு நோய் ஒழிப்புச் செயற்பாடுகளை மதீப்பீடு செய்தனர்.No comments:

Post Top Ad