சம்மாந்துறை வலய மட்ட கபடி போட்டியில் அடிதடி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 30, 2014

சம்மாந்துறை வலய மட்ட கபடி போட்டியில் அடிதடி பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்மாந்துறை வலயத்தின் வலய மட்ட கபடி விளையாட்டுப் போட்டியில் ஏற்பட்ட அடிதடி, குழப்பநிலை காரணமாக இன்று புதன்கிழமை சொறிக்கல்முனை ஹொலிக்குறோஸ் மகா வித்தியாலய மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
மாணவர்கள் பாடசாலைக்கு வெளியே பதாதைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெற்றோர் பாடசாலைக்குள்ளே குழுமியிருந்து தமக்கு நியாயம் நீதி வழங்கவேண்டும் என்று கோரி போர்க்கொடி தூக்கினர். ஆசிரியையைத் தாக்கிய மாணவனை தண்டிக்க வேண்டும் எனறெல்லாம் கோசம் எழுப்பினர். மொத்தத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
உடடியாக சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம் ஸ்தலத்திற்கு விரைந்து இருமணி நேர கலந்துரையாடலின் பின்பு சுமுக முடிவுக்கு வந்தது.
வலயக் கல்விப்பணிமனை சார்பில் பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான டாக்டர் உமர் மௌலானா எஸ்.புவனேந்திரன் கோட்டக் கல்விப்பணிப்பாளர் என்.செல்வநாதன் உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆசிரிய ஆலோசகர் எஸ்.சங்கரப்பிள்ளை ஆகியோர் சமுகமளித்திருந்தனர்.
குழப்பத்தை தவிர்க்குமுகமாக பொலிஸாரும் இராணுவமும் அங்கு வரவழைக்கப்பட்டது. வீதியில் பொலிசார், போக்குவரத்துப் பொலிசார் இராணுவம் குவிக்கப்பட்டிருந்துத. எனினும் எந்தவித அசம்பாவிதமும் இடம்பெறவில்லை.
கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சோ.புஸ்பராஜா மற்றும் சொறிக்கல்முனை பங்குத்தந்தை வணபிதா. ஜேசுதாசன் உள்ளிட்டோரின் வழிகாட்டலின் காரணமாக பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்பட்டது.
பிரச்சினையில் சம்பந்தப்பட்ட சம்மாந்துறை முஸ்லிம் தேசிய கல்லுரி அதிபர் எம்.எச்.பாறூக் மற்றும் பிரதி அதிபர்கள் கலந்துரையாடலின் இறுதிக்கட்டத்தில் நேரடியாக வந்து நடந்த நிகழ்வையிட்டு வேதனையடைவதோடு மன்னிப்பையும் கோருவதாக கேட்டதையடுத்து பிற்பகல் 12.30 மணியளவில் சுமுக தீர்வுக்கு வந்தது.

No comments:

Post Top Ad