மட்டக்களப்பு பிரதேசங்களின் பிரதேச சபை புதிய கட்டிடங்கள் கிழக்கு முதலமைச்சரால் திறந்து வைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 02, 2014

மட்டக்களப்பு பிரதேசங்களின் பிரதேச சபை புதிய கட்டிடங்கள் கிழக்கு முதலமைச்சரால் திறந்து வைப்பு


மட்டக்களப்பு படுவான்கரை -  வவுணத்தீவு - கொக்கட்டிச்சோலை ஆகிய பிரதேசங்களில்  புதிய பிரதேசச்சபை கட்டிடங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத் திறந்துவைத்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய  புறநெகும திட்டத்தின் கீழ் தலா நான்கு கோடி ரூபா செலவில்  இப்புதிய கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

அனைத்து வசதிகளுடன் கூடிய குறித்த கட்டிடங்கள் திறந்து வைக்கும் நிகழ்வுகள்  மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திகாந்தனின் வேண்டுகோளுக்கமைய நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிடங்கள் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி ஆலோசகரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திகாந்தன்- மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம் சார்ள்ஸ்-  பட்டிப்பளை பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம்- முன்னாள் கிழக்கு மாகாணச்சபை உறுப்பினர் பூ. பிரசாந்தன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




No comments:

Post Top Ad