ஜனாதிபதிக்கு பஹ்ரெய்னின் அதியுயர் காலீபா விருது வழங்கி கௌரவிப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

ஜனாதிபதிக்கு பஹ்ரெய்னின் அதியுயர் காலீபா விருது வழங்கி கௌரவிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, பஹ்ரெய்ன் அரசாங்கம் அதி உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் பஹ்ரெய்னுக்கு விஜயம் செய்துள்ளனர்.

பஹ்ரெய்ன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதி உயர் விருதான காலீபா விருது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பஹ்ரெய்ன் மன்னர் அஹமத் பின் இசா அல் காலீபாவினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி வழங்கிய பங்களிப்பினை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
1940ம் ஆண்டு முதல் தடவையாக இந்த விருது வழங்கப்பட்டது. 1970ம் ஆண்டு முதல் சீரான முறையில் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
சவூதி மன்னர், மலேசிய பிரதமர், இரண்டாம் எலிசபத் மஹாராணி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்னர் சேக் இசாபின் சல்மான் அல் காலீபா, மனிதாபிமானத்திற்கு வழங்கிய உன்னத சேவையை போற்றும் நோக்கில் காலீபா விருது வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post Top Ad