உலகில் முதலாவது இடத்தைப் பிடித்த துபாய் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 15, 2014

உலகில் முதலாவது இடத்தைப் பிடித்த துபாய்



உலகில் காண வேண்டிய 25 மிகச்சிறந்த இடங்களின் பட்டியலில் துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
சுற்றுலா பயணிகளுக்கான பயண ஏற்பாடுகளை மேற்கொள்ளும் உலக புகழ்பெற்ற ‘ட்ரிப் அட்வைசர்', இணையதளம் ‘டிராவலர்ஸ் சாய்ஸ்' என்ற சிறந்த இடத்தை தெரிவு செய்து விருது வழங்க திட்டமிட்டிருந்தது.

இதன் அடிப்படையில் உலகின் மிகச்சிறந்த 25 இடங்களை பல்வேறு அளவுகோள்கள் கொண்டு பட்டியலிட்டது.
இதில் முதலிடத்தை பிடித்த துபாய், சுற்றுலா பயணிகளுக்காக சுமார் 646 பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து துபாய் சுற்றுலா மற்றும் வணிகக் கழகத்தின் முதன்மைச் செயல் அலுவலகர் இஸாம் காஸிம் கூறுகையில், 25 சிறந்த இடங்களில் முதலாவதாக எங்களைத் தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம் நாங்கள் பெருமைப்படுத்தப் பட்டிருக்கிறோம் என்றும் உலக அளவிலான இசை, கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பல் நிகழ்ச்சிகள் விரைவில் நடைபெற உள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.




No comments:

Post Top Ad