இந்திய அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டிய கம்பஹா வர்த்தகர் திடீர் மரணம் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

இந்திய அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டிய கம்பஹா வர்த்தகர் திடீர் மரணம்


பங்களாதேஷில் இடம்பெற்று முடிந்த உலகக் கிண்ண இருபது-20 போட்டித் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் என பந்தயம் கட்டியிருந்த கம்பஹா வர்த்தகர் ஒருவர் இந்தியாவின் தோல்வியை அடுத்து திடீர் என மரணமடைந்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இந்தியா இறுதிப் போட்டியில் வெற்றி பெறுவது உறுதியென தெரிவித்து பந்தயம் கட்டியுள்ளார்.
அத்துடன் நேற்று இரவு இடம்பெற்ற குறித்த இறுதிப் போட்டியை பந்தய நிலையம் ஒன்றில் இருந்து அவர் கண்டு களித்துள்ளார்.
இதன் போது போட்டி இறுதியில் இலங்கை அணி வெற்று பெற்றுவிட்டதாகவும் இந்தியா தோல்வியடைந்து விட்டதாகவும் அறிவிக்கப்படவே குறித்த வர்த்தகர் மயக்கமுற்று கீழே விழுந்துள்ளார்.
இதனையடுத்து அந்த வர்த்தகர் உடனடியாகவே கம்பஹா வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் கம்பஹா திடீர் மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பீ.பீ.ஆர்.பீ.ராஜபக்ஷ முன்னிலையில் இன்று இடம்பெற்றது.
இதன் போது சாட்சியமளித்த குறித்த வர்த்தகரின் மனைவி இதற்கு முன்னர் தனது கணவருக்கு எவ்வித நோய்களும் இருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனைகளில் திடீர் மாரடைப்பு காரணமாகவே குறித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post Top Ad