சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஜனாதிபதி வாழ்த்து! பலத்த வரவேற்பு ஏற்பாடுகள்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Monday, April 07, 2014

சாம்பியனான இலங்கை கிரிக்கெட் அணியினருக்கு ஜனாதிபதி வாழ்த்து! பலத்த வரவேற்பு ஏற்பாடுகள்!


இருபதுக்கு இருபது கிரிக்கெட் இறுதிப் போட்டியில் உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பங்களாதேஸ் நாட்டில் டாக்கா நகரில் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் பேரவையின் டுவன்ரி 20 உலகக் கிண்ணத்தை இலங்கை அணி சுவீகரித்துக் கொண்டது.

இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று இலங்கை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
அணியின் தலைவர் லசித் மாலிங்க மற்றும் இறுதிப் போட்டியுடன் டுவன்ரி 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்ட குமார் சங்கக்கார,  மஹேல ஜயவர்தன ஆகியோருக்கு ஜனாதிபதி தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரபையின் பல இறுதிப் போட்டிகளில் தகுதி பெற்றுக் கொண்ட இலங்கையினால் சாம்பியன் பட்டத்தை வென்றெடுக்க முடியவில்லை.
எனினும் பங்களாதேஸில் நடைபெற்ற இந்தியாவிற்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை சிறந்த முறையில் வெற்றியீட்டியது.
பொதுவாக ஜனாதிபதி நேரடியாக இறுதிப் போட்டியை பார்வையிடச் செல்லும் போட்டிகளில் இலங்கை தோல்வியடைந்து விடும் என்ற கருத்தும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இருபது ஓவர் கிரிக்கெட்டில் இலங்கை உலகக் கோப்பையை வெல்வதென்பது இதுவே முதல் முறை.
இந்த ஆட்டத்தோடு சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகின்ற குமார சங்கக்கார தனது கடைசி ஆட்டத்தில் அரைசதம் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓய்வு பெறுகின்ற மற்றொரு மூத்த ஆட்டக்காரரான மஹேல ஜெயவர்த்தனவும் 24 ரன்களை எடுத்து அணியை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றிருந்தார்.
இந்திய அணி நிர்ணயித்த 131 ரன்கள் இலக்கை இலங்கை மட்டைவீச்சாளர்கள் 13 பந்துகள் மீதமிருக்க எட்டியிருந்தனர்.
முதலில் மட்டை வீசிய இந்திய அணியில் விராத் கோலியைத் தவிர மற்ற மட்டை வீச்சாளர்களின் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாகவே இருந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் இலங்கையில் நடந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் இறுதியாட்டத்தை மேற்கிந்தியத் தீவுகளிடம் தோற்று கோப்பையைத் தவறவிட்டிருந்த இலங்கை அணி, இம்முறை இறுதியாட்டத்தை சிறப்பாக வென்று கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணிக்கு பலத்த வரவேற்பு ஏற்பாடுகள்
2014ஆம் ஆண்டு பங்களாதேஸில் இடம்பெற்ற 20க்கு20 உலக கிண்ணப்போட்டியில் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி  நாளை செவ்வாய்க்கிழமை  நாடு திரும்புகிறது. இந்த தகவலை ஸ்ரீலங்கா கிரிக்கெட் சபை இன்று திங்கட்கிழமை காலை அறிவித்துள்ளது
இந்தநிலையில் இலங்கை அணியை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கா கிரிக்கட் ஏற்பாடுகளை செய்துள்ளது
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து திறந்த ஜீப் வண்டியில் இலங்கை கிரிக்கட் வீரர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனர்
இதன்போது பொதுமக்கள் தமது வாழ்த்துக்களை அவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம் என்று ஸ்ரீலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது
இதற்கிடையில் இலங்கை கிரிக்கட் அணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தொலைபேசியின் ஊடாக தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
இலங்கை வீரர்கள் நாட்டுக்கு கீர்த்தியை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
இதேவேளை இந்திய அணியின் தோல்விக்கு யுவ்ராஜ் சிங்கின் மெதுவான துடுப்பாட்டமே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
21 பந்துகளை சந்தித்த அவர் 11 ஓட்டங்களை பெற்றார்
எனினும் இதனை இந்திய அணியின் தலைவர் மஹேந்திரசிங் டோணியும் யுவ்ராஜின் தந்தையான யோகராஜூம் நிராகரித்துள்ளனர்
யுவ்ராஜின் நிலை அனைத்து வீரர்களுக்கு ஏற்படக்கூடும் என்று டோணி குறிப்பிட்டுள்ளார்.
பிந்திக்கிடைத்த செய்திகளின்படி இந்திய அணியின் தோல்விக்கு யுவ்ராஜின் துடுப்பாட்டமே காரணம் என்று கூறி, இந்திய ரசிகர்கள் அவரது சண்டிக்கார் வீட்டின் மீது கல்லெறி தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது

No comments:

Post Top Ad