ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கிரிக்கெட் அதிகாரிகள் தடை ! மஹேல , சங்கா குற்றச்சாட்டு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கிரிக்கெட் அதிகாரிகள் தடை ! மஹேல , சங்கா குற்றச்சாட்டு


இலங்கை கிரிக்கெட் அணியின் மூத்த வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் இலங்கையின் கிரிக்கெட் அதிகாரிகள் மீது குற்றச்சாட்;டுக்களை முன்வைத்துள்ளனர்.
பங்களாதேஸில் நடைபெற்ற ஐசிசி உலக கிண்ண போட்டிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க கிரிக்கெட் அதிகாரிகள் தடைவிதித்தனர்.
அத்துடன் தாம் 20க்கு 20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஒய்வுபெறப் போவதாக அறிவித்தமை குறித்து கிரிக்கெட் அதிகாரிகள் ஊடகங்களுக்கு தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டதாகவும் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோர் குறிப்பிட்டனர்.
இது தொடர்பில் தாம் கவலை கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
20க்கு 20 உலக கிண்ண வெற்றிக்கு பின்னர் நேற்று நாடு திரும்பிய அவர்கள் ஊடகவியலாளர்களிடம் இந்த கருத்துக்களை வெளியிட்டனர்.
சில கிரிக்கெட் அதிகாரிகள் மனங்களை பாதிக்கும் வகையில் நடந்து கொள்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

No comments:

Post Top Ad