இம்போட்மிரரின் புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதல்.... - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 23, 2014

இம்போட்மிரரின் புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதல்....எதிர்வரும் 24.04.2014 அன்று கோலாகலமான முறையில் திறந்து வைக்கப்பட இருக்கிறது இம்போட்மிரர் இணையத்தளம் மற்றும் இம்போட் சர்வதேச வானொலிக்கான புதிய கட்டிடம்.


மிகவும் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட வானொலிக்கானதும் மற்றும் இணையத்தள செய்திகளுக்கானதுமான இக்கட்டிடம் திறந்து வைக்கும் நிகழ்வில் அரசியல் தலைவர்கள் ,அரசியல் முக்கியஸ்தர்கள் ஊடகத்துறை பிரதம நிறைவேற்றுப்பணிப்பாளர்கள், வானொலிக் கட்டுப்பாட்டாளர்கள், சிரேஷ்ட அறிவிப்பாளர்கள்,கவிஞர்கள், பாடகர்கள்இ கல்விமான்கள், இன்னும் இன்னும் முக்கிய அதிதிகளுடன் உலக அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் அவர்களின் வாழ்த்துரையுடன் திறந்து வைக்கப்பட இருக்கிறது.

இந்நிகழ்வு 24.04.2014 அன்று மாலை 4.30 மணிக்கு அட்டாளைச்சேனையில் உள்ள அதன் கலையகம் அட்டாளைச்சேனை அல்-அர்ஹம் வித்தியாலய பேண்ட் வாத்தியக்குழுவின் வரவேற்புடன் அதிதிகள் அழைத்து வரப்பட்டு காரியாலயம் திறந்து வைக்கப்பட்டதும் மீண்டும் மாலை 5 மணிக்கு ஒலுவில் கிறீன் வில்லாஷ் (ஒலுவில் பொலிஸ் நிலையத்திற்கு முன்னால்) இம்போட் சர்வதேச வானொலி அறிவிப்பாளர்களுடன் சர்வதேச ரசிகர் வட்ட மைய்ய உறுப்பினர்கள் சேர்ந்து வெளியிடும் ஒலியமுதம் நூல் வெளியீடும் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற இருக்கிறது

இந்நிகழ்வுக்கு இம்போட்மிரர் இணையத்தள செய்தியாளர்கள்,  அறிவிப்பாளர்கள், அபிமான வாசக நேயர்கள் அன்புறவுகள் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்படுகிறது.

No comments:

Post Top Ad