மன்னார்- மறிச்சிகட்டி விவகாரம் நீதிமன்றில் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Thursday, April 24, 2014

மன்னார்- மறிச்சிகட்டி விவகாரம் நீதிமன்றில்



(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மன்னார்-மறிச்சிகட்டிää மரைக்கார்தீவு மக்கள் வில்பத்து வன பகுதியல் அத்துமீறிக் குடியேறியுள்ளார்கள் என வன பரிபாலனை சபையினால் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கான நீதிமன்ற விசாரணைகள் முதற் தடவையாக மன்னார் மாவட்ட நீதிமன்றில் இடம்பெறவுள்ளது. இதில் மரைகார்தீவைச் சேர்ந்த 10 பேர் பிரதிவாதிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

மரைகார்தீவு மக்களுக்குச் உரித்தான காணிகள் கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நிலையில்ää முசலி பிரதேச செயலாளர் எழுத்துமூலம் அனுமதி வழங்கி அடையாளப்படுத்திய காணிகளிலேயே மேற்படி மக்கள் 2010ம் ஆண்டு முதல் தற்காலிகக் கொட்டில்கள் அமைத்து வாழ்ந்து வருகின்றார்கள்.

பொதுநோக்கு மண்டபம்ää பொதுக் கிணறுகள் என்பன அமைக்கப்பட்டுள்ள குறித்த காணியை மரைகார்தீவு மக்கள் தமது பூர்வீகக் காணி என உரிமை கூறுகின்றனர். எனினும் வன பரிபாலன திணைக்களம்ää இக்காணி வில்பத்து சரணாலய எல்லைப்பகுதி (டீழரனௌ ணழநெ) என உரிமை கோருகின்றனர்.

இந்நிலையில் குறித்த விடயம் நீதிமன்றில் எவ்வாறு தீர்க்கப்படப் போகின்றது என்பது தொடர்பில் பலரும் அவதானம் செலுத்தியுள்ளனர்.

No comments:

Post Top Ad