சவூதியில் இறந்த இலங்கைப் பெண்ணின் உடல் கல்முனையில் நல்லடக்கம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 22, 2014

சவூதியில் இறந்த இலங்கைப் பெண்ணின் உடல் கல்முனையில் நல்லடக்கம் (படங்கள் இணைப்பு)


சவூதி அரேபியாவில் இறந்த கல்முனைப் பெண்மணியின் உடல் 10 மாதங்களின் பின் கடந்த நேற்று முன்தினம் சனிக்கிழமை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று ஞாயிறன்று பகல் கல்முனை நற்பிட்டிமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபனம் மேற்கொண்ட பெருமுயற்சியின் காரணமாக இப்பிரேதம் உரியவர்களால் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது. இச்சம்பவத்தை ஊடகங்களுக்கு கொண்டு வந்ததன் பலனாகவே இப்பிரேதம் கிடைத்தது. எனவே அந்த தாபனத்திற்கும் ஊடகங்களுக்கும் குடும்பத்தினர் நன்றிகளைத் தெரிவித்தனர்.
அவர் கடமையாற்றிய சவுதி அரேபிய வீட்டு எஜமானின் நிதிச் செலவுடன்; அங்குள்ள பிரேத பெட்டியில் பூரண சுகாதார முறையில் இறுக்கி அடைக்கப்பட்ட நிலையில் கல்முனை வந்து சேர்ந்தது. கல்முனை நற்பிட்டிமுனையிலுள்ள வீட்டில் ஒருநாள் வைக்கப்பட்டு இந்து முறைப்படி சகல கிரியைகளும் நடாத்தப்பட்ட போதிலும் பெட்டி திறக்கப்ப்படவில்லை. சுகாதார பாதுகாப்பு காரணங்களுக்காக அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை பகல் நற்பிட்டிமுனை இந்து மயானத்திற் கொண்டு செல்லப்பட்டு அங்கு பொதுச் சுகாதார பரிசோதகர்கள் முன்னிலையில் பெட்டி திறக்கப்பட்டு 15 நிமிடங்களின் பின் உறவினர்களுக்கு காட்டப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.
சவூதி அரேபியாவில் இறந்த பெண்மணியின் உடல் 8 மாத காலமாகியும் இலங்கை வரவில்லை.. எனவே உரிய நடவடிக்கை எடுத்து சடலத்தை தந்துதவுமாறு உறவினர்கள் வெளிவிவகார அமைச்சிடம் மன்றாட்டமாக கோரிக்கை விடுத்திருந்த செய்தி ஏலவே ஊடகங்களில் வெளிவந்திருந்தமை தெரிந்ததே.
இது பற்றி மேலும் தெரியவருவதாவது..
கல்முனை, நற்பட்டிமுனை கிராமத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தாயாரான கணபதிப்பிள்ளை ரமணி என்ற குடும்ப பெண் குடும்ப கஷ;டம் காரணமாக கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்காக சென்றுள்ளார்.
கணவர் காத்தமுத்து வேதானந்தம் பிள்ளைகளான வே.பவித்ரா வயது 26,  வே.கேமலதா வயது 23, வே.கோபிகாந்த் வயது 19,  வே.மோனிசா வயது 12 ஆகியோரை விட்டு சவூதி சென்றிருந்தார்.
இவர் கடந்த 2013ம் ஆண்டு ஐ_லை மாதம் 14ம் திகதி சுகயீனம் காரணமாக இறந்துள்ளதாக ஆகஸ்ட் மாதம் 25ம் திகதி அவரின் வீட்டிற்கு தகவல் கிடைத்துள்ளது. அத்தினத்தில் அவரின் அப்பாவும் இறந்துள்ளார்.
துக்கத்தில் இருக்கும் போது மற்றும் ஒரு துக்கச் செய்தியும் அவர்களின் வீட்டிற்கு கிடைத்துள்ளது. செய்வது அறியாது கடந்த வாரம் கதைத்த மனைவி எவ்வாறு சுகயீனம் காரணமாக இறந்திருப்பார் என சந்தேகம் கொண்டு மரணத்தில் சந்தேகம் உள்ளது உடன் சட்ட நடவடிக்கையினை மேற்கொண்டு உடலை இலங்கைக்கு அனுப்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சு ஆகியவற்றிற்கு கணவர் காத்தமுத்து வேதானந்தம் முறைப்பாடு செய்திருந்தார்.
பிரேத பரிசோதனையில் அவர் இருதய நோய் காரணமாக இறந்துள்ளதாக கடந்த 2014.ஐனவரி 20ம் திகதி மருத்துவ அறிக்கையின் பிரதிகளை வெளிநாட்டு அமைச்சு கணவருக்கு அனுப்பியுள்ளார்கள்.
அதன் பின்னர் உடலை உடன் இலங்கைக்கு கொண்டுவந்து தருமாறு கேட்டு சம்மதக் கடிதத்தினை அமைச்சுக்கு கணவர் தெரிவித்திருந்தாh.; ஆனால் இதுவரை உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படவில்லை. மரணித்து சுமார் 8 மாதகாலமாகியும் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்படாதுள்ளது.
இதனால் அவரின் குடும்பத்தினர் செய்வதறியாது உள ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களின் நிலமையினை கருத்திற் கொண்டு குறிப்பிட்ட பெண்ணின் உடலை உடன் இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து தருமாறு உரிய அரச அதிகாரிகளிடம் பகிரங்க வேண்டுதலை விடுத்திருந்தார் அவரின் மகள் வே.கேமலதா.
மரணித்த ரமணியின் கணவர் காத்தமுத்து வேதானந்தம் மகள் வே.கேமலதா ஆகியோர் காரைதீவிலுள்ள மனித அபிவிருத்தித் தாபனத்திடம் சென்றும் முறையிட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் இவரது சடலத்தை தருவித்துக் கொடுக்குமாறு மனித அபிவிருத்தித் தாபனம் வேண்டுகோள் விடுத்ததோடு நடவடிக்கையில் இறங்கியது.
ஆனால் ரமணியின் உடல் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் தாமதாகவே நடைபெற்றுக் கொண்டிருந்தது. இப்பிரச்சினை தொடர்பாக மனித அபிவிருத்தி தாபனத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் பொன்னையா சிறிகாந் சம்பந்தப்பட்டவர்களோடு தொடர்புகொண்டார்..
மனித அபிவிருத்தி தாபனம் 2013.09.09 ஆம்; திகதியே இலங்கை வெளிவிவகார அமைச்சின் தொலைபேசி இலக்கத்துடன் (0112871700) காவற்தூது (ஊழுNளுருடுயுசு ருNஐவு) அதிகாரி திருமதி லக்மாலியுடன் தொடர்பு கொண்டு ரமணி இறந்தமை தொடர்பாகவும், இவரது உடலை பிரேத பரிசோதனை செய்து நாட்டிற்கு கொண்டு வருவதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறும் ரமணியின் குடும்பத்தினர் சார்பாக வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
கடந்த 2014.03.13 ம் திகதி ரமணியின் பிரச்சினை தொடர்பான செய்திகள் வீரகேசரி, தினகரன், சுடர்ஒளி ஆகிய அச்சு ஊடகங்கள் இணையதள ஊடகங்களான தெரண, தமிழ்சிஎன்என், காரைதீவு நியுஸ், பெற்றிநியுஸ், வீரகேசரி ஆகிய இணையதளம் மற்றும் இலத்திரனியல் சர்வதேச ஊடகமான டீடீஊ தமிழ்ஓசை, வானொலி ஊடாகவும் பரவலாக வெளிக்கொணரப்பட்டது.
அத்தோடு சர்வதேச ஊடகமான டீடீஊ தமிழ் ஓசை, இலங்கையிலுள்ள ரமணியின் குடும்பத்தினருடனும், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், வெளிவிவகார அமைச்சுடனும் மற்றும் சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடனும் தொடர்புகளை மேற்கொண்டு தகவல் சேகரித்து செய்தி வெளியிட்டனர்.
சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயத்துடன் ரமணியின் குடும்ப உறுப்பினர்;கள் பல தடவைகள் தொடர்புகளை மேற்கொண்ட போது ரமணி வேலை செய்த எஜமான் ( வீட்டுரிமையாளர் ) தலைமைறைவாகி உள்ளார் எனும் பதிலையே தொடர்ச்சியாக கூறி வந்தார்.
இவ் ஊடகச் செய்தியின் பின்னர் சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் அதிகாரி நியாஸ் அவர்கள் தொடர்பு கொண்டு ரமணி வேலை செய்த வீட்டு எஜமான் தலைமறைவாகியிருந்ததாகவும் தற்போது சவூதி பொலிஸார்; இவரை கண்டுபிடித்துள்ளார்கள்.
இவர் எதிர்வரும் 22.03.2014 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜர் படுத்துவதாகவும்; தெரிவித்துள்ளார். அதை அடுத்து ஒரு வார காலப்பகுதிக்குள் ரமணியின் பூதவுடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக சவூதி அரேபியாவின் இலங்கை தூதரக அதிகாரி குடும்பத்தினருக்கு தெரிவித்துள்ளார்;.
17.03.2014 மனித அபிவிருத்தி தாபனத்திற்கு ரமணியின் குடும்பத்தினர் வருகை தந்து மேற்படி தகவல்களை தெரிவித்ததுடன் கடந்த எட்டு மாத காலப் பகுதிக்குள் பல தடவைகள் மேற்படி அதிகாரிகளுடன் தொடர்பு கொண்ட போது எவ்விதமான பொறுப்பான பதிலையும் கூறத் தவறிய அதிகாரிகள் ஊடக செய்தியின் பின்னர்; பல தடவைகள் தாங்களாகவே தொடர்புகளை மேற்கொள்வதாக ரமணியின் குடும்பத்தினர் தெரிவித்தனர்..
இறுதியாக மனித அபிவிருத்தி தாபனம் மேற்கொண்ட ஊடகங்கள் வாயிலாக செய்தியை வெளியிடும் யுக்தி பயனளித்துள்ளது. இதனால் ரமணியின் பூதவுடல் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான செயற்பாடு விரைவாக்கப்பட்டுள்ளது.
2014.04.17 ம் திகதி கணபதிப்பிள்ளை ரமணியின் பிரேதம் இலங்கைக்கு அனுப்பப்படும் தகவல் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கார்க்கோ பொதிகள் பிரிவு காரியாலயம் மூலம் எமக்கு கிடைக்கப் பெற்றது. இத்தகவலின் உண்மை நிலவரத்தினை அறிந்த பிறகு இலங்கை வெளிவிவகார அமைச்சின் ஊடாக நாம் பெற்ற தகவல் உறுதி செய்யப்பட்டது.
2014.01.19 ம் திகதி காலை 10.00 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து ரமணியின் பிரேதத்தினை கணவன் கே.வேதானந்தம் பெற்றுக் கொண்டார்.
இதன் பலனாக ரமணியின் பிரேதம் 10 மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு நேற்று நல்லடக்கம் செய்யபட்டடது.No comments:

Post Top Ad