காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் நூற்றாண்டைக் கடந்த கல்விப் பணி-பழைய மாணவர் சங்கமொன்றினை அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஒன்று கூடல் - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

காத்தான்குடி அல்ஹிறா மஹா வித்தியாலயத்தின் நூற்றாண்டைக் கடந்த கல்விப் பணி-பழைய மாணவர் சங்கமொன்றினை அங்குரார்ப்பணம் செய்வதற்கான ஒன்று கூடல்


(பழுலுல்லாஹ் பர்ஹான்)

1911-03-01 ம் ஆண்டில் காத்தான்குடி 5 ம் குறிச்சி பழைய தெரு ஆண்கள் பாடசாலை என்ற பெயரில் 26 மாணவர்களுடன் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.


கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது முஸ்லிம் பாடசாலை என்ற பெருமை இப் பாடசாலைக்கு உண்டு.

1971 ம் ஆண்டு முதல் அல் ஹிறா வித்தியாலயம் என பெயர் மாற்றம் செய்யப்பட்ட இப்பாடசாலை பல்வேறு வளர்ச்சிப் படிகளின் ஊடாக 2007 ஐ.சி. பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டு க.பொ.த. (உ-த) கலைääவணிக வகுப்புக்களுடன் இயங்குகிறது.

தனது 103 வருட கல்விப் பணியில் பல ஆயிரக் கணக்கான கல்விமான்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
இங்கு ஆரம்பääஇடை நிலைக் கல்வியைப் பெற்ற  பல்வேறு வைத்தியர்கள்ääபொறியியலாளர்கள்ää                சட்ட வல்லுணர்கள்ääபோன்ற இன்னோரன்ன துறைகளிலும் நிபுணத்துவம் பெற்றோர் உலகம் முழுவதும்           சிறப்புற்று விளங்குகின்றனர்.

இது இப் பாடசாலையின் பெயரை உலகம் முழுவதும் பறைசாற்றுகின்றது.
ஆயினும் இப்பாடசாலை பழைய மாணவர் அமைப்பொன்றை கொண்டிராதது ஒரு               குறைபாடாகவே நோக்கப்படுகின்றது.

இதனை போக்கும் வகையிலும் காலத்தின் தேவைகருதியும் சட்டத் தேவைப்பாடு காரணமாகவும் பழைய மாணவர் அமைப்பபொன்றின் அவசியம் இப்பாடசாலை சமூகத்தினால் வெகுவாக உணரப்பட்டதன் விளைவாக எதிர்வரும்.2014-04-15 திகதி செவ்வாய்க்கிழமை பழைய மாணவர் சங்கமொன்றினை அங்குரார்ப்பணம்    செய்வதற்கான ஒன்று கூடலை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.

எனவே இதில் கைகோர்த்துக் கொள்ள விரும்பும் அல்ஹிறா மஹா வித்தியாலய பழைய மாணவர்கள் எமக்கு தங்களின் ஒப்புதலை alhira.mvkky@gmail.com     இம் மின்னஞ்சல் முகவரி ஊடாக வழங்குவதுடன்           15-04-2014 செவ்வாய்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறும் ஒன்று கூடலிலும் அங்கத்துவப்            பெயர்ப் பதிவிலும் கலந்து கொள்ளுமாறு அன்புடனும் நன்றியுடனும் கேட்டுக்கொள்கின்றோம்                  என பாடசாலை அதிபர் ஜனாபா எம்.ஏ.எம்.யூ.மாஹிரா தெரிவித்தார்.

இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு இத் தொலைபேசி இலக்கங்கள் ஊடாக -0757986570ää0652248649ää0653652919 தொடரப்பு கொள்ளமுடியும்  எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post Top Ad