முஸ்லிம் காங்கிரஸின் எச்சரிக்கை - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 13, 2014

முஸ்லிம் காங்கிரஸின் எச்சரிக்கை


முஸ்லிம் மக்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது.
மிகவும் தீர்மானமிக்க கோரிக்கைகள் அடங்கிய விசேட கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்திற்கு ஜனாதிபதி உரிய பதிலளிக்க தவறினால், சகல முஸ்லிம் கட்சிகளுடனும் இணைந்து கடுமையான நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்ற போதிலும், தீர்வுத் திட்டங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால் கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேரிடும் எனவும் வலியுறுத்தி கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சி அமைச்சர் ஹக்கீமுடன் இரகசிய பேச்சுவார்த்தை
ஆளும் கட்சியின் முக்கிய அமைச்சர் ஒருவர, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
குறித்த அமைச்சர் சிரேஸ்ட அமைச்சர் என்பதுடன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய பதவியொன்றை வகிக்கின்றார்.
இந்த பேச்சுவார்த்தையில் முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய உறுப்பினர்கள் சிலரும் பங்கேற்றுள்ளனர்.
புலனாய்வுப் பிரிவினர் இது குறித்த தகவலை அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பிற்கு தூதுவராலய பிரதிநிதிகள் சிலரும் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
என்ன விடயங்கள் பற்றி பேசப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் வெளியிடப்படவில்லை.

No comments:

Post Top Ad