காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதி –காத்தான்குடி ஜமாத்தே இஸ்லாமி கிளையின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு-படங்கள் இணைப்பு - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Sunday, April 20, 2014

காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதி –காத்தான்குடி ஜமாத்தே இஸ்லாமி கிளையின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானம் மூலம் துப்பரவு-படங்கள் இணைப்பு(பழுலுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் ஜமாத்தே இஸ்லாமியின் இமாறா செயற்திட்டத்தின் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதான நிகழ்வு 20-04-2014  இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காத்தான்குடி அஷ் -ஷ_ஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதியில் இடம்பெற்றது.


இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை  பொறுப்பாளர் ஆசிரியர் எம்.எம்.எச்.எம். இப்றாஹீம் தலைமையில்; இடம்பெற்ற இவ் பாரிய சிரமாதன நிகழ்வில் கிளையின் செயலாளர் ஆசிரியர் ஜஹானி உட்பட இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது காத்தான்குடி அஷ் -ஷூஹதா வித்தியாலய தோனா கல்வாய் பகுதி இலங்கை ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை உறுப்பினர்களின் மனித நேயம் பேணும் டெங்கு ஒழிப்பு பாரிய சிரமதானத்தின் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

குறித்த ஜமாத்தே இஸ்லாமியின் காத்தான்குடி கிளை காத்தான்குடி பிரதேசத்தில் பல்வேறு மனிதாபிமான சமூக சேவை பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post Top Ad