ருவாண்டா இனப்படுகொலை ஐநாவின் வெட்கக் கேடு: பான் கீ மூன்! - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Wednesday, April 09, 2014

ருவாண்டா இனப்படுகொலை ஐநாவின் வெட்கக் கேடு: பான் கீ மூன்!
(tho)
ருவாண்டா இனப்படுகொலை ஐ.நாவின் வெட்கக் கேடு என்று ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறியுள்ளார்.

ருவாண்டாவில் சுமார் எட்டு லட்சம் மக்கள் கொல்லப்பட்ட இனப்படுகொலையின் 20-வது ஆண்டு நிறைவை ஒட்டி, அந்நாடு ஒருவார கால துக்கம் அனுஷ்டிக்க துவங்கியுள்ளது.நேற்றைய ஞாபகார்த்த நிகழ்வில் அந்நாட்டின் அதிபர் போல் சுகாமே மற்றும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஆகியோர் கலந்துகொண்டு நினைவுத் தீபத்தை இணைந்து ஏற்றிவைத்தனர்.அப்பொழுது பேசிய ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் கூறுகையில்,’இந்த படுகொலைகளை தடுக்க தவறியமைக்காக ஐ.நாவின் மீது இன்னமும் வெட்கக் கேடு ஒட்டிக்கொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சர்வதேச பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர்.ஆனால்,தமது நிதியமைச்சரை பிரான்சு திரும்ப அழைத்துக்கொண்டது.
ருவாண்டா இனப்படுகொலையில் பிரான்சுக்கும் பங்கிருப்பதாக அதிபர் சுகாமே மீண்டும் குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பிரான்சு இந்த முடிவை எடுத்துள்ளதாம்.

No comments:

Post Top Ad