தப்பிச் சென்ற புலி உறுப்பினர் பெண் வேடமிட்டிருந்த நிலையில் கைது - www.newmuthur.com

Breaking

Post Top Ad


Post Top Ad


Tuesday, April 29, 2014

தப்பிச் சென்ற புலி உறுப்பினர் பெண் வேடமிட்டிருந்த நிலையில் கைது
(tm)

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


வவுனியாஇ குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஜெயபாலன் ஸ்டென்லி ரமேஸ் (வயது 28) என்ற இந்த சந்தேகநபர், வவுனியா, குட்ஷெட் பிரதேசத்தில் வைத்து நேற்று திங்கட்கிழமை (28) கைது செய்யப்பட்டார் என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். 

வவுனியா பொலிஸாருக்கு கிடைக்க புலனாய்வுத் தகவலை அடுத்தே இச்சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் இவர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து பொய் முடியிட்டு தொப்பி அணிந்திருந்ததாக பொலிஸார் கூறினர். 

ஆயுதங்களை வைத்திருந்தார் மற்றும் கொள்ளைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் இம்மாதம் முதலாம் திகதி, அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், கடந்த 20ஆம் திகதி இரவு 11 மணியளவில், இவர் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post Top Ad